மெகாஸ்டார் மம்முட்டிக்கு மேலுமொரு மணிமகுடம்!.. பாடப் புத்தகத்திலேயே வந்துட்டாரே!..

மம்முட்டியின் ஐந்து தசாப்த கால திரைப்பயணம், கேரளாவின் மஹாராஜா கல்லூரியில் BA வரலாறு பாடத்திட்டத்தில் History of malayalam cinema என்ற பெயரில் இடம்பெற்றுள்ளது.;

By :  SARANYA
Published On 2025-07-03 12:53 IST   |   Updated On 2025-07-03 12:53:00 IST

மலையாள சினிமாவின் ’மெகாஸ்டார்’ என்று அழைக்கப்படும் நடிகர் மம்முட்டி தனது 50 வருடங்களுக்கு மேலான சினிமா பயணத்தில் இதுவரை 400க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். மேலும், அவரது இத்தனை ஆண்டுக்கான உழைப்பிற்கு சிறந்த அங்கிகாரம் கிடைத்துள்ளது.

வழக்கறிஞராகப் பயிற்சி பெற்று திரைப்படத் துறையில் நுழைந்த மம்முட்டி 1971ஆம் ஆண்டு அனுபவங்கள் பாலிச்சகள் என்ற திரைப்படத்தில் ஒரு சிறிய வேடத்தில் அறிமுகமானார். நியூ டெல்லி, ஒரு சிபிஐ டைரி குறிப்பு போன்ற படங்களில் நடித்தது அவருக்கு பெரும் புகழைப் பெற்றுத் தந்து முன்னணி நடிகராக உயர்த்தியது. மேலும், வதக்கன் வீரகதா, விடியும் வரை, பொந்தன் மாட, ஆதி ஆத்மா, பிரான, புழு உள்ளிட்ட பல படங்களில் நடித்து சிறந்த நடிகருக்கான விருதையும் வென்றுள்ளார்.


மம்முட்டி தனது "பிளேஹவுஸ்" மற்றும் "மம்முட்டி கம்பெனி" மூலம் பல படங்களைத் தயாரித்து வருகிறார். மலையாளத்தில் மட்டுமல்லாமல் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளிலும் நடித்துள்ளார். சமீபத்தில், மம்முட்டிக்கு புற்றுநோய் இருப்பதாக வதந்திகள் பரவின. ஆனால், அவை தவறானவை அவர் ரம்ஜான் நோன்பு காரணமாக ஓய்வில் இருக்கிறார் என்று தெரிவித்தனர். மேலும், தற்போது மம்முட்டி பசுக்கா, கமல்கவல், பேட்ரியாட் போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், மம்முட்டியின் ஐந்து தசாப்த கால திரைப்பயணம், கேரளாவின் மஹாராஜா கல்லூரியில் BA வரலாறு பாடத்திட்டத்தில் History of malayalam cinema என்ற பெயரில் இடம்பெற்றுள்ளது. இது அவரது சினிமா பங்களிப்புக்கு கிடைத்த மற்றொரு அங்கீகாரமாகும். இந்த கௌரவத்தை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

மம்முட்டியின் மகன் துல்கர் சல்மானும் மலையாளம், தெலுங்கு, தமிழ் என ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்து தொடர்ந்து நல்ல நல்ல படங்களை கொடுத்து வருகிறார். லக்கி பாஸ்கரை தொடர்ந்து அவர் நடித்து வரும் காந்தா திரைப்படத்திற்காக பலரும் காத்திருக்கின்றனர்.

Tags:    

Similar News