ஜெயிலர் 2 புரமோ வீடியோ ரெடி!.. ஹைப் ஏத்தும் நெல்சன்!.. சீக்கிரம் விடுங்கப்பா!..
Jailer2: ஜெயிலர் படத்தின் வெற்றி ரஜினியை உற்சாகமாக்கி வேகமாக ஓட வைத்திருக்கிறது. முன்பெல்லாம் இரண்டு வருடத்திற்கு ஒன்று அல்லது ஒரு வருடத்திற்கு ஒரு படத்தில் நடிப்பார். ஆனால், இப்போதெல்லாம் இடைவெளி விடாமல் நடிக்க துவங்கிவிட்டார். தர்பார் படம் சரியாக போகவில்லை என்பதால் சிறுத்தை சிவா சொன்ன அண்ணாத்த கதையில் நடித்தார் ரஜினி.
அந்த படமும் சரியாக போகவில்லை. அப்போதுதான் பீஸ்ட் பட இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் நடிப்பது என முடிவெடுத்தார். இத்தனைக்கும் பீஸ்ட் படத்தை ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் அதிகமாக ட்ரோல் செய்தார்கள். எனவே, பெரிய வசூலை அப்படம் பெறவில்லை. ஆனாலும் அவரை நம்பி ஜெயிலர் படத்தில் நடித்தார் ரஜினி.
நெல்சன் மீது ரஜினி வைத்த நம்பிக்கை. ஹிட் படம் கொடுத்தே ஆக வேண்டும் என நெல்சன் போட்ட உழைப்பு என எல்லாம் சேர்ந்து படத்தை ஹிட் அடித்தது. குறிப்பாக இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ரஜினி பேசியதே இப்படத்திற்கு பெரிய புரமோஷனாக அமைந்தது. அதோடு, இந்த படத்தில் ‘காவாலா’ பாடலுக்கு தமன்னா போட்ட குத்தாட்டமும் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.
ஜெயிலர் படம் 600 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. எனவே, ரஜினி, நெல்சன் ஆகியோருக்கு விலை உயர்ந்த சொகுசு காரையும் கலாநிதி மாறன் பரிசளித்தார். இந்த படத்திற்கு பின் ரஜினி வேட்டையன் படத்தில் நடித்தார். இந்த படம் ஓரளவுக்கு வெற்றியை பெற்றது.
இப்போது லோகேஷின் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்து வருகிறார். வழக்கம்போல் லோகேஷின் ஸ்டைலில் கூலி படமும் கேங்ஸ்டர் படமாக உருவாகி வருகிறது. ரஜினியின் பிறந்த நாளான கடந்த 12ம் தேதி அப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டது. எனவே, இப்படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பு இருக்கிறது.
ஒருபக்கம் ஜெயிலர் 2 படத்தின் கதை, திரைக்கதையை நெல்சன் எழுதி முடித்துவிட்டார். கூலி படம் முடிந்ததும் அப்படத்தின் படப்பிடிப்பு துவங்கவுள்ளது. சமீபத்தில் ரஜினியை வைத்து இந்த படத்தின் புரமோ வீடியோவையும் நெல்சன் எடுத்துவிட்டாராம். அனேகமாக ஜனவரி 1ம் தேதி ஆங்கில புத்தாண்டு அன்று இது வெளியாகும் என சொல்லப்படுகிறது.
Also Read: மைக்மோகனுக்கும் எஸ்என்.சுரேந்தருக்கும் என்னதான் பிரச்சனை? இதுல விஜய்க்கு என்ன சம்பந்தம்?