விடுதலை 2 படம் வேற லெவல்!. நிறைய டிபேட் நடக்கும்!.. வெளியான முதல் விமர்சனம்!..
விடுதலை: இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, மஞ்சு வாரியர், ராஜூமேனன் பவானி ஸ்ரீ, சேர்த்தன், சூரி ஆகியோர் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் விடுதலை 2. இந்த திரைப்படம் வருகிற டிசம்பர் 20ஆம் தேதி அதாவது நாளை திரையரங்குகளில் வெளியாக இருக்கின்றது. இப்படத்தின் மீது ஏகப்பட்ட எதிர்பார்ப்பு இருக்கின்றது. அதற்கு காரணம் இந்த திரைப்படத்தின் முதல் பாகம் மிகப்பெரிய அளவிற்கு வெற்றி பெற்றது தான்.
இதையும் படிங்க: செந்தாமரையின் திருமணம் இப்படியா நடந்தது? அண்ணா செய்த மேஜிக்
பொதுவாக இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான படங்கள் அனைத்துமே மக்களிடையே மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இவர் இயக்கத்தில் வெளிவந்த படங்கள் அனைத்தும் வித்தியாசமாக அதேசமயம் சமுதாயத்திற்கு ஒரு கருத்தை எடுத்துக் கூறும் திரைப்படமாக இருக்கும். அப்படித்தான் விடுதலை திரைப்படத்தையும் இயக்கி இருக்கின்றார் வெற்றிமாறன்.
விடுதலை படத்தின் முதல் பாகம் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான நிலையில் அப்படத்தின் இரண்டாவது பாகம் கடந்த இரண்டு வருடங்களாக எடுக்கப்பட்டு தற்போது ரிலீசுக்கு தயாராகி இருக்கின்றது. முதல் பாகத்தில் நடிகர் சூரிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு எடுக்கப்பட்டிருந்த நிலையில் இரண்டாவது பாகம் முழுக்க முழுக்க நடிகர் விஜய் சேதுபதியை மையமாக வைத்து இயக்கி இருக்கின்றார்.
மேலும் இந்த திரைப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசை அமைத்திருக்கின்றார். படத்தின் நீளம் 2 மணி நேரம் 53 நிமிடங்கள் இருந்த நிலையில் சமீபத்தில் இப்படத்தில் இருந்து 8 நிமிடங்கள் குறைக்கப்பட்டதால் 2 மணி நேரம் 45 நிமிடங்கள் இருக்கும் என்று கூறப்படுகின்றது. மேலும் தமிழகத்தில் வழக்கமாக 11 மணிக்கு முதல் காட்சி திரையிடப்படும். தற்போது சிறப்பு காட்சி அனுமதியின் பெயரில் காலை 9 மணிக்கு முதல் காட்சி தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திரைப்படத்தை பார்த்த சென்சார் குழுவினர் படத்திற்கு ஏ சான்றிதழ் வழங்கி இருக்கிறார்கள். அதாவது இந்த திரைப்படத்தை 18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் பார்ப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. படம் நாளை வெளியாக உள்ள நிலையில் இன்று சினிமா விமர்சகர் அந்தணன் விடுதலை 2 திரைப்படம் குறித்து சில விஷயங்களை பகிர்ந்து இருக்கின்றார்.
சமீபத்தில் தனியார் youtube சேனல் இருக்கு பேட்டி அளித்த அவர் படம் பார்த்தவர்கள் படம் குறித்து தெரிவித்ததாக சில கருத்துக்களை பகிர்ந்து இருக்கின்றார். அதில் அவர் தெரிவித்திருந்ததாவது 'இந்த திரைப்படத்தை பார்த்த பலரும் அட்டகாசமாக இருக்கின்றது. இந்திய சினிமாவில் இப்படம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். படம் வெளியானதற்கு பிறகு அரசியல் தொடர்பான விவாதங்களையும் ஏற்படுத்துவதற்கு வாய்ப்பு இருக்கின்றது .
மேலும் இசைஞானி இளையராஜாவின் இசை படத்தை மிகச் சிறப்பாக கொண்டு சென்று இருக்கின்றது. மற்ற படங்களுக்கு இல்லாத அளவிற்கு இந்த திரைப்படத்திற்கு மிகவும் மெனக்கட்டு பார்த்து பார்த்து பாடலையும் பின்னணியும் இசையையும் இசையானி கொடுத்திருக்கின்றார். படத்திற்கு ஏ சான்றிதழ் கொடுக்கப்பட்டுள்ளதால் வியாபார ரீதியாக சில பிரச்சினைகள் ஏற்படும்.
தமிழகத்தில் எந்த பிரச்சனையும் வராது, காரணம் என்னவென்றால் எந்த இளைஞர்களும் இப்படத்தை போய் பார்க்காமல் இருக்க மாட்டார்கள். அதிலும் குடும்பத்துடன் செல்லும்போது இவர்கள் மட்டும் படம் பார்க்க அனுமதி இல்லை என்று கூற முடியாது. ஆனால் சாட்டிலைட் உரிமம் விற்கும்போது சில பிரச்சனைகள் வரும். படம் நிச்சயம் மிகப்பெரிய வெற்றியை அடையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை' என்று கூறி இருக்கின்றார் அந்தணன்.