கன்னட மொழியை சிறுமைப்படுத்தும் எண்ணம் இல்லை... நீதிமன்ற கண்டனத்துக்குப் பிறகு கமல் கடிதம்
தக் லைஃப் ஆடியோ லாஞ்சில் தமிழில் இருந்து கன்னடம் வந்தது என கமல் பேசியது பெரிய சர்ச்சையாக வெடித்தது. இதனால் கர்நாடகாவில் பெரும் பிரச்சனையாக வெடித்தது. கமலை மன்னிப்பு கேட்கச் சொன்னார்கள். அன்பு ஒருபோதும் மன்னிப்பு கேட்காது என்றார் கமல். இந்நிலையில் கர்நாடகாவில் ராஜ்கமல் தக் லைஃப் படத்தைத் திரையிட அனுமதி கோரி மனுதாக்கல் செய்தார்.
கர்நாடக உயர்நீதிமன்றத்தில் கமல் தொடர்ந்து வந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தன. இதற்கு நீதிபதிகள் கமலுக்குக் கேள்வி எழுப்பியுள்ளனர். சமூக நல்லிணக்கத்திற்குப் பாதிப்பு. அமைதியின்மை ஏற்பட்டுள்ளது. கமலுக்கு மன்னிப்பு கேட்பதில் என்ன சிக்கல் என்றெல்லாம் கேள்வி எழுப்பி உள்ளனர். நீதிபதிகள் எழுப்பிய கேள்விகள் கருத்துரிமைக்கு சவாலா என பெரிய கேள்வியைத் தூண்டியுள்ளது. இந்த நிலையில் 2.30மணி வரை கமல் மன்னிப்பு கேட்க கெடு விதித்துள்ளது நீதிமன்றம்.
கர்நாடக வர்த்தக சபைக்கு கமல் கொடுத்துள்ள விளக்கம் கொடுத்து கடிதம் எழுதியுள்ளார். நான் சொன்னது தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளது வேதனை அளிக்கிறது. ஒரே குடும்பமொழியாக தான் பேசியது தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. கன்னட நடிகர் சிவராஜ்குமார் மீது உண்மையான பாசத்தோடு கூறியது தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளது.
இதனால் சிவராஜ்குமார் அவமானங்களை சந்திக்க நேர்ந்தது தனக்கு வருத்தமாக உள்ளது. தமிழைப்போலவே கன்னடமும் நான் நீண்ட காலமாகப் போற்றும் இலக்கிய மற்றும் கலாச்சார பாரம்பரியத்தையும் கொண்டுள்ளது. கன்னடத்தினர் தனக்கு அளித்த பாசத்தைப் போற்றுவதாகவும் அந்தக் கடிதத்தில் கமல் தெரிவித்துள்ளார்.
நீங்கள் என்ன வரலாற்று ஆய்வாளாரா என்றெல்லாம் கமலுக்கு நீதிபதிகள் கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ள நிலையில் கமல் இப்படி கடிதம் எழுதி இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்தப்பிரச்சனை சுமூகத் தீர்வை எட்ட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
காவிரி நதி நீர் பிரச்சனையில் இதே வேகம் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். உண்மை தானே பேசினார் எதற்கு மன்னிப்பு?, டுபாகூர் நீதி என கமெண்ட்கள் வந்தவண்ணம் உள்ளன.