71 வயசானாலும் கமலுக்கு காதல் சேட்டை குறையலயே... 30 வருஷத்துக்கு முன்னாடி செஞ்சதை இப்ப செய்றாரே..!?
மணிரத்னம், கமல், சிம்பு காம்போவில் தக் லைஃப் படத்தின் அட்டகாசமான டிரெய்லர் நேற்று வெளியானது. ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இதுகுறித்து பிரபல தயாரிப்பாளர் பாலாஜி பிரபு சொல்றது என்னன்னு பாருங்க.
தக் லைஃப், நாயகன் இடையே பல விஷயங்கள் ஒத்துப்போகுது. நாயகன் படத்துல இருக்குற பல விஷயங்கள் தக் லைஃப்ல ஒத்துப்போகுது. நாயகன் படத்துல கமலோடு டெல்லி கணேஷ் இருப்பாரு. இங்க நாசர் இருக்காரு. சின்ன கமல் காட்டுவாங்க. அதே மாதிரி இங்க சின்ன சிம்புவைக் காட்டுறாங்க. நாயகன்ல சரண்யாவோடு காதல் இருக்கும். இங்க அபிராமி, திரிஷாவோடு காதல்.
71 வயசானாலும் இன்னும் கமலுக்குக் காதல் சேட்டை குறையல. 30 வருஷத்துக்கு முன்னாடி விருமான்டியில அபிராமியை என்ன பண்ணினாரோ அதை இப்பவும் பண்ணிக்கிட்டு இருக்காரு. அதுதாங்க லிப்டு கிஸ். அது கமலுக்காகவே ஒதுக்கப்பட்ட ஏரியா. எப்பவும் புகுந்து விளையாடுவாரு. ஃபைட்லாம் அசத்தலா இருக்கு. கமலுக்கு நடிப்பைப் பத்தி சொல்லவே வேணாம். பிரமாதமா இருக்கும். ஏழாம் அறிவு சூர்யா மாதிரி இருக்காரு. இன்னொரு பக்கம் சத்யா கமல் கொஞ்சம் வயசான மாதிரி இருக்காரு.
சிம்பு சின்னப் பையனா இருக்கும்போது கமலோட உயிரை ஏதோ ஒரு சூழல்ல காப்பாத்துறாரு. அதனால கமல் எடுத்து வளர்க்குறாரு. கமல் ஒரு தாதாவா இருக்கணும். அவருக்கு சிம்பு எல்லா இடத்துலயும் பாதுகாப்பா இருக்குற மாதிரி தெரியுது. ஒரு தந்தைக்கும், வளர்ப்பு மகனுக்கும் இடையே உள்ள கதை.
சிம்புவுக்காக எல்லா உரிமைகளையும் கொடுக்குறாரு. ஆனா கமல் கூட இருக்குறவங்களுக்கு அது பிடிக்கல. ஒரு கட்டத்துல இவங்க ரெண்டு பேருக்குமே சண்டை ஆகிடுது. அங்க தான் படமே டேக் ஆஃப் ஆகுது. சிம்பு சொல்றாரு. இனிமே நான் தான் ரங்கராய சக்திவேல்னு சொல்றாரு.
அந்தக் கேரக்டர் விக்ரம்ல ரோலக்ஸா வந்த சூர்யாவை ஞாபகப்படுத்துது. அதுக்குப் பிறகு இவங்க ரெண்டு பேருக்குமே பயங்கர போர். கமலுக்கும், சிம்புவுக்கும் இடையே நடக்கும் சண்டைக்காட்சிகள் பிரமாதமா இருக்கும். அன்பறிவு தான் மாஸ்டர். கமல், சிம்பு ரெண்டு பேருமே பைட், பாட்டு, டான்ஸ் எல்லாமே சூப்பரா இருக்கும்.
இந்த இருவருக்குமே மோதல் என்று வரும்போது அது அதிகமாக எதிர்பார்ப்பைக் கிளப்பியுள்ளது. படத்துல ஆரம்பத்துல கமல் எமன் கிட்ட இருந்து என்னைக் காப்பாத்துனது இவன்னு சிம்புவை சொல்றாரு. கடைசியில எனக்கும் எமனுக்கும் நடக்குற போராட்டம்னு கமல் சொல்றாரு.
சிம்பு கமலோடு போட்டி போட்டு நடிச்சிருக்காருன்னு சொல்றதை விட கமல் சிம்புவோடு போட்டி போட்டு நடிச்சிருக்காருன்னு சொல்லலாம். ஆனா கமல் எந்த காலத்திலும் கமல் கமல்தான் நிரூபிச்சிருக்காரு. எல்லாமே அல்டிமேட். சிம்புவுக்கு இந்தப் படம் நல்ல தீனி. சிம்புவுக்கு இது மாதிரி நல்ல கதை அமைந்தால் சிறப்பா பண்ணுவாரு. அந்த மேஜிக் இந்தப் படத்துல நடக்கும். கமலுக்கு சமமான ஸ்கோப்பை சிம்புவுக்குக் கொடுத்துருக்காரு. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.