மனுஷன் யாருக்கும் சிபாரிசு பண்ணதில்ல.. ‘கூலி’ படத்தில் கமல் சிபாரிசு செய்த நடிகர்
coolie
ரஜினி நடிப்பில் அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் திரைப்படம் கூலி. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். படத்தில் ரஜினியுடன் நாகர்ஜூனா, அமீர்கான், சத்யராஜ், சுருதிஹாசன் என எண்ணற்ற பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். இந்தப் படம் ஆகஸ்ட் 14 ஆம் தேதி ரிலீஸாக இருக்கின்றது. இசை வெளியீட்டு விழாவுக்கு முன்னாடி படத்தின் ப்ரிவியூ ஈவண்டை நடத்த படக்குழுவும் திட்டமிட்டிருக்கிறார்கள்.
லோகேஷ் படம் என்றாலே கேங்ஸ்டர், வன்முறை என ஒரு பெரிய கமெர்ஷியல் படமாகத்தான் இருக்கும். அந்த வகையில் ரனியை வைத்து பக்கா கமெர்ஷியல் பேக்கேஜாக இந்தப் படத்தை லோகேஷ் கொடுத்திருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. பெரிய பெரிய ஸ்டார்க்ள் இந்தப் படத்தில் நடித்திருப்பதால் கூலி படம் 1000 கோடியை நெருங்குமா என்றும் ஆரவமுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஏனெனில் கன்னடம், ஹிந்தி என பிற மொழி படங்கள் 1000 கோடியை அசால்ட்டாக தொட்டு விட்டன. ஆனால் பெரிய சூப்பர்ஸ்டார்கள் கோலிவுட்டில் இருந்தும் இன்னும் அந்த வசூலை தொடவில்லை. கடைசியாக ரஜினியின் ஜெயிலர் திரைப்படம்தான் 600 கோடிக்கும் மேலாக வசூல் செய்து பெரிய சாதனையை பெற்றது.
அதனால் 1000 கோடியை ரஜினியின் கூலி படம்தான் நெருங்கும் என எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் கூலி படத்தில் எம்ஜிஆரின் வளர்ப்பு பேரன் ஜூனியர் எம்ஜிஆர் ஒரு முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளார். அவரை சிபாரிசு செய்ததே கமல்தானாம்.
விக்ரம் படத்தின் போதே லோகேஷிடம் ஜூனியர் எம்ஜிஆரை சிபாரிசு செய்திருக்கிறார் கமல். ஏதாவது கேரக்டர் வந்தால் சொல்கிறேன் என லோகேஷ் கூறியிருக்கிறார். அதன் பிறகு லியோ படமும் வந்து லோகேஷ் இவரை அழைக்கவே இல்லையாம். ஆனால் லோகேஷுடன் தான் ஜூனியர் எம்ஜிஆர் அடிக்கடி கிரிக்கெட் விளையாடுவாராம். அப்போது வாய்ப்பு பற்றி கேட்டிருக்கிறார் ஜூனியர் எம்ஜிஆர்.
junior mgr
மனுஷன் யாருக்கும் சிபாரிசு பண்ண மாட்டார். உன்னை பண்ணியிருக்கிறார். மறப்பேனா? கண்டிப்பாக கூப்பிடுகிறேன் என லோகேஷ் கூறியிருக்கிறார். அதன் பிறகு தான் கூலி படத்தில் ஜூனியர் எம்ஜிஆருக்கு வாய்ப்பு கொடுத்தாராம் லோகேஷ்.