சினிமாவுக்கு வரலன்னா கமல் என்னவா ஆகிருப்பாரு? அட அவரே சொல்லிட்டாரே..!

By :  SANKARAN
Update: 2025-05-11 06:50 GMT

தக் லைஃப் படத்தில் கமல், மணிரத்னம், சிம்பு காம்போ முதன்முறையாக இணைகிறார்கள். இது பெரிய எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ளது. காரணம் கமலும், சிம்புவும் 3 வயதில் இருந்தே சினிமாவிற்கு வந்து விட்டார்கள். இருவரும் சினிமாவைப் பற்றி சகலமும் தெரிந்து வைத்திருப்பவர்கள். பன்முகத்திறன் கொண்டவர்கள்.

மணிரத்னம் கமலை வைத்து நாயகன் படத்தில் கடைசியாக இணைந்தார். அந்த மாபெரும் வெற்றிக்குப் பிறகு கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்குப் பிறகு தக் லைஃப் படத்தில் கமல் இணைந்துள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் பெரிய ஹைப்பை கொடுத்துள்ளது. படத்தில் சிம்புவுக்கும் கமலுக்கு இணையான ரோல் கொடுக்கப்பட்டுள்ளது.

முதல் சிங்கிள் ஜிங்குச்சா ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. தனியார் சேனலுக்காக நிகழ்ச்சி ஒன்றில் தக் லைஃப் குழுவினர்களுடன் உரையாடல் நடைபெற்றது. அதில் கமல், சிம்பு, திரிஷா கலந்து கொண்டனர். கமல் பேசும்போது மணிரத்னம், சிம்பு குறித்தும், தனது குழந்தை நட்சத்திர அனுபவங்கள் குறித்தும் பேசினார். அப்போது சொன்ன தகவல்கள் இவை.

தேவர்மகன் படத்தின்போதுதான் எனக்கு சிவாஜி எல்லாம் எவ்வளவு பெரிய ஆளுன்னு முழுசா புரிஞ்சுது என்கிறார் கமல். சின்ன வயசுல சிவாஜி, எம்ஜிஆர், ஜெமினி எல்லாம் மாமா. எல்லாரும் ஒரே குடும்பம்னு நினைச்சிக்கிட்டு இருந்தேன். 14 வயசு ஆகும்போது என்னை ஸ்டூடியோக்குள்ளயே விடல. என் முகம் மாறிப்போச்சு.

நான் சினிமாவுக்கு வந்தது விந்தையிலும் விந்தை. நான் வக்கீலா வந்துருக்க வேண்டியது. வந்துருக்க முடியுமான்னு என்னைக் கேட்டா தான் தெரியும். ஆனா குடும்பத்து வழக்கப்படி இவரு வக்கீலா வருவாருன்னு நினைச்சிக்கிட்டு இருந்தாங்க. போயிருப்பேன் வக்கீல்கிட்ட. குமாஸ்தாவா போயிருப்பேன். அவ்வளவு தான்.


நல்லவேளை எனக்கு இது வராதுன்னு சொன்னதும் அதை நம்பினாங்க பேரன்ட்ஸ். அவங்களுக்கு நன்றி சொல்லிட்டு தான் இந்த மேடையில உட்காருவேன். இன்னொருத்தருக்கும் நன்றி சொல்லணும். டுபேக்ட்னு ஒரு சிங்கர் இருக்காரு. அவரு தான் முதன்முதலா தக் லைஃப்ங்கற வார்த்தையை யூஸ் பண்ணினாரு.

நான் மணிரத்னத்தை அஞ்சரை மணி மணிரத்னம்னு சொல்வேன். அவரு சூட்டிங்குக்கு அஞ்சரை மணிக்கே வந்துடுவார். என்னால வர முடியாது. நான் 7 மணிக்குத் தான் வருவேன்னு சொல்வேன். கடவுளைப் பற்றி கமலிடம் கேட்ட போது நான் எப்பவுமே இரை தேடி அலையறவன். கிடைச்சா சாப்பிட்டுருவேன் என்று தக் பதில் கொடுத்தார் கமல். 

Tags:    

Similar News