Keerthi Suresh: கீர்த்தி சுரேஷ் கணவரின் 'சொத்து' மதிப்பு இதுதான்!

By :  Murugan
Update: 2024-12-13 06:23 GMT

கீர்த்தி suresh

Keerthi suresh: கடந்த 15 ஆண்டுகளாக ஆண்டனி தட்டில் என்பவரை காதலித்து வந்த கீர்த்தி சுரேஷ், நேற்று பெற்றோர் சம்மதத்துடன் காதலரை திருமணம் செய்து கொண்டார். இதில் நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். கோவாவில் நடைபெற்ற இந்த மணவிழாவிற்கு கோலிவுட்டில் இருந்து விஜய், திரிஷா இருவரும் தனி விமானத்தில் சென்று மணமக்களை வாழ்த்தினர்.


தமிழில் 'இது என்ன மாயம்' படத்தில் அறிமுகமான கீர்த்தி மகாநதி படத்திற்காக தேசிய விருது வாங்கி அசத்தினார். சொல்லப்போனால் அவர் இப்படி நடிப்பார் என்பதே அந்த படத்தின் வழியாக தான் அனைவருக்கும் தெரியவந்தது. அந்தளவுக்கு அதில் சாவித்திரியாக வாழ்ந்திருந்தார். தற்போது இவரின் கைவசம் ரிவால்வர் ரீட்டா, கண்ணி வெடி உள்ளிட்ட படங்கள் உள்ளன. இந்த படத்தோடு சினிமாவிற்கு முழுக்கு போடுகிறாரா? இல்லை திருமணத்திற்கு பின்னும் தொடர்ந்து நடிப்பாரா? என்பது தெரியவில்லை.

கீர்த்தி சுரேஷின் சொத்து மதிப்பு ரூபாய் 41 கோடியாக உள்ள நிலையில் அவரின் கணவர் ஆண்டனியின் சொத்து மதிப்பு குறித்த விவரங்கள் வெளியாகி இருக்கின்றன. அதன்படி ஆண்டனிக்கு ரூபாய் 12 கோடி வரை சொத்து மதிப்பு உள்ளதாக தெரிகிறது. எது எப்படியோ கேரியரின் உச்சத்தில் இருக்கும்போதே கீர்த்தி திருமண பந்தத்தில் இணைந்து அடுத்த கட்டத்திற்கு தயாராகி விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News