அந்த பிரபல நடிகரோட ஒரே ரூமில் இருக்கணும்… கீர்த்தி சுரேஷ் சொன்ன ஷாக் நியூஸ்!

By :  AKHILAN
Published On 2025-07-03 11:11 IST   |   Updated On 2025-07-03 11:11:00 IST

Keerthy Suresh: பிரபல நடிகை கீர்த்தி சுரேஷ் தன்னுடைய திருமணத்துக்கு பிறகு கொடுத்த பேட்டி தற்போது வைரலாகி ஷாக்கை ஏற்படுத்தி இருக்கிறது.

தமிழில் இது என்ன மாயம் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் கீர்த்தி சுரேஷ். அப்படத்தில் பெரிய அளவு அவருக்கு வரவேற்பு கிடைக்கவில்லை என்றாலும் கீர்த்தி சுரேஷுக்கு தொடர்ந்து வாய்ப்புகள் கிடைத்தது.

அதிலும் சிவகார்த்திகேயனுடன் ரஜினி முருகன், ரெமோ, தனுஷுடன் தொடரி படத்தில் நடித்தார். சினிமாவில் சூப்பர்ஹிட் நடிகையாக தொடர்ந்து வளர்ந்து வந்தார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டார்.

அதையும் தாண்டி கதையின் நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்த மகாநடி திரைப்படம் இவரின் கேரியரையே மாற்றியது. இருந்தும் தனி நாயகியாக அவருக்கு தொடர் வாய்ப்புகள் வரவில்லை. ஆனால் சினிமாவில் நல்ல கதைகளை தேர்வு செய்து நடித்து வந்தார். 

 

இந்நிலையில் தன்னுடைய நீண்டகால காதலரான ஆண்டனி தொட்டிலை கடந்தாண்டு இருமத முறைப்படி திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னரும் நடிப்பில் கவனம் செலுத்தி வரும் கீர்த்தி ரிவால்வர் ரிட்டா, கன்னிவெடி படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் பேட்டிகளில் கலந்துக்கொள்ளும் கீர்த்தி சுரேஷிடம் மறுபடியும் லாக்டவுன் வைத்தால் ஒரே வீட்டில் யாருடன் இருக்க விரும்புவீர்கள் எனக் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த கீர்த்தி சுரேஷ், நானி, அவரின் மனைவி அஞ்சு மற்றும் அவர் மகன் ஜுன்னுவுடன் இருக்க வேண்டும் எனக் குறிப்பிட்டார். 

 

ஆனால் தன்னுடைய காதலர் கணவரை இப்படி கழட்டி விட்டீங்களே. அவரும் பாவம் இல்லையா என ரசிகர்கள் தற்போது கீர்த்தியை கலாய்த்து வருகின்றனர்.

Tags:    

Similar News