இயக்குனரால் பாலியல் கொடுமை.. தற்கொலை முடிவு.. ஆந்தக்கரை பேச்சிக்கு இப்படியெல்லாம் ஆச்சா?

By :  Rohini
Update:2025-02-28 17:05 IST

90களில் இருந்து 2கே கிட்ஸ்கள் வரைக்கும் அனைவரும் கொண்டாடும் ஒரு பாடலாக இருப்பது ஆத்தங்கர மரமே என்ற பாடல். அது ரஹ்மான் செய்த மேஜிக் என்று தான் சொல்ல வேண்டும். கிட்டத்தட்ட கிழக்குச் சீமையிலே படம் வெளியாகி 33 வருடங்கள் ஆகி இருந்தாலும் அந்த பாடலுக்கு என ஒரு தனி மவுசு இப்போது வரை இருந்து வருகிறது. அந்தப் பாடலுக்கு பிறகு தான் பாடலில் நடித்த அஸ்வினி மிகவும் பிரபலமானார். ஒரு சில படங்களில் முன்னணி நடிகையாக நடித்து வந்தவர் திடீரென திருமணமாகி சினிமாவை விட்டு விலகினார்.

திரும்பவும் ஒரு காம்பேக் கொடுத்திருக்கிறார் அஸ்வினி. இந்த நிலையில் தனது வாழ்க்கை துணைவரை பற்றியும் தனது சினிமா கரியரில் நடந்த ஒரு கசப்பான அனுபவத்தை பற்றியும் ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். பொதுவாக சினிமாவில் அனைவரும் பேசப்படுவது அட்ஜஸ்ட்மென்ட் என்பதை பற்றி தான். அது இவருடைய வாழ்க்கையிலும் நடந்திருக்கிறது என கூறியிருக்கிறார். அதாவது எப்போதுமே படப்பிடிப்பிற்கு செல்லும் பொழுது தன் அம்மாவுடன் தான் அஸ்வினி செல்வது வழக்கமாம்.

அதேபோல் ஒரு படத்தின் விவாதத்திற்கு செல்லும் போது அன்று அவருடைய அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லையாம். அதனால் அந்தப் படத்தின் ஹேர் டிரஸ்ஸர் அஸ்வினியை அழைத்துக்கொண்டு போயிருக்கிறார். ஒரு தனி வீடு .அந்த வீட்டின் கீழே அலுவலகம். மேலே வீடு. இப்படி தான் அந்த வீடு அமைந்திருந்ததாம். அஸ்வினியும் ஹேர் டிரஸ்ஸரும் அலுவலகத்தில் காத்திருக்க ஒருவர் வந்து உங்களை இயக்குனர் மேலே வரச் சொல்கிறார் என அஸ்வினியிடம் சொல்லியிருக்கிறார் .

அஸ்வினி எப்போதுமே தன் அம்மாவுடனேயே சென்றதனால் தனியாக போவதற்கு பயந்து கொண்டு அந்த ஹேர் டிரஸரை அழைத்து இருக்கிறார். அதற்கு இந்த ஹேர் டிரஸ்ஸர் நான் எதுக்கு ?நீ போயிட்டு வா என சொல்லி அனுப்பினாராம் .அப்போது டீன் ஏஜ் பருவம். சிறு பிள்ளை போல படி ஏறி துள்ளி குதித்து அந்த இயக்குனரை பார்க்க சென்றாராம். மேலே யாரும் இல்லை .அருகில் ஒரு பெட்ரூம் மட்டும் இருந்ததாம் .அங்கிருந்து ஒரு குரல் உள்ளே வா என அழைத்திருக்கிறது.

இவரும் அந்த பருவத்தில் எதுவும் தெரியாத பருவம் என்பதால் கூப்பிட்டதும் உள்ளே போய்விட்டாராம். அதன் பிறகு எல்லாம் முடிந்து தான் வெளியே வந்தேன் என அந்த பேட்டியில் கூறினார். எப்படி மாடிப் படியில் துள்ளி குதித்து ஏறினேனோ அதற்கு அப்படியே நேர் எதிராக மிகுந்த சோகத்துடன் படி இறங்கி கீழே வந்தேன் .வந்து என் அம்மாவிடம் எப்படி இதை சொல்வது என பயந்து கொண்டே அனைத்தையும் சொன்னேன். அதற்காக என்னுடைய அம்மா நான் தான் இதற்கு காரணம். உன்னுடன் நான் வந்திருந்தால் இதெல்லாம் நடந்திருக்குமா என அழுதாரம்.

இருந்தாலும் அஸ்வினிக்கு நாம் ஏதோ தப்பு பண்ணி விட்டோம் என்ற ஒரு பயம் இருந்து கொண்டே இருக்க அன்று இரவு தூக்க மாத்திரைகளை போட்டு தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்து இருக்கிறார். ஆனால் அவரை மருத்துவமனைக்கு அழைத்துக் கொண்டு அவரை காப்பாற்றி விட்டார்களாம். அன்று நடந்த அந்த சம்பவம் தான் அதிலிருந்து படப்பிடிப்பிற்கு நான் தனியே தான் செல்வேன். போராடினேன். எது வந்தாலும் பார்த்துக்கலாம் என எனக்கு ஒரு தைரியம் வந்தது.

அதற்கு என் அம்மாவும் உறுதுணையாக இருந்தார். அந்த இயக்குனர் ஒரு பெரிய மலையாள பட இயக்குனர். என் அப்பா வயது போன்றவர். இது என்னுடைய கணவருக்கும் தெரியும். நானே என் கணவரும் இந்த சம்பவத்தை கடந்து வந்து விட்டோம். திருமணம் ஆகி சிங்கப்பூரில் சில காலம் இருந்தேன். குழந்தை பிறந்து பெரியாளாக வரும் வரை அங்கே கல்லூரியில் பேராசிரியராகவும் பணிபுரிந்தேன். இப்போது மீண்டும் சினிமாவில் கம்பேக் கொடுக்கிறேன் என அஸ்வினி அந்த பேட்டியில் கூறி இருக்கிறார்.

Tags:    

Similar News