ஸ்மார்ட்டா காய் நகர்த்தும் சிவகார்த்திகேயன்.. பாலிவுட் பக்கமும் போயிடுவார் போலயே

By :  Rohini
Update:2025-02-28 17:47 IST

டாக்டர் டான் போன்ற படங்களின் அடுத்தடுத்த வெற்றிக்கு பிறகு சிவகார்த்திகேயன் மார்க்கெட் உயர்ந்தது என்று சொல்லலாம் .சொல்லப்போனால் அந்த படங்களின் வெற்றிக்கு பிறகு சினிமாவைப் பற்றிய அறிவையும் அனுபவத்தையும் நன்கு கற்றுக் கொண்டார் சிவகார்த்திகேயன். அதிலிருந்து கொஞ்சம் சுதாரித்தும் கொண்டார். எந்த மாதிரி இயக்குனர்களை பிடிப்பது எப்படிப்பட்ட கதைகளை தேர்ந்தெடுப்பது என கதை தேர்ந்தெடுத்தலிலும் கவனம் செலுத்தி வருகிறார் சிவகார்த்திகேயன்.

சமீபத்தில் வெளியான அமரன் திரைப்படம் எப்பேர்பட்ட வெற்றியை கொடுத்தது என அனைவருக்குமே தெரியும். அந்த படத்திற்காக தன்னை எந்த அளவு மாற்றிக் கொண்டார் என்பதையும் நம்மால் பார்க்க முடிந்தது. இந்த படத்திற்குப் பிறகு சிவகார்த்திகேயன் இந்த சினிமாவின் ஒரு முக்கியமான பீஸ் என்று ஆகிவிட்டார். ஏன் அடுத்த தளபதி சிவகார்த்திகேயன் தான் என்று கூறி வருகிறார்கள்.

அமரன் திரைப்படத்தின் வெற்றி ஒட்டுமொத்த தமிழ் சினிமாவிற்கு கிடைத்த வெற்றி. அந்த படத்திற்கு பிறகு ஏ ஆர் முருகதாஸ் உடன் மதராசி என்ற படத்திலும் சுதா கொங்கராவுடன் பராசக்தி என்ற படத்திலும் நடித்து வருகிறார். இரண்டு இயக்குனர்களுமே தமிழ் சினிமாவில் ஒரு கை தேர்ந்த இயக்குனர்கள். இப்படி அடுத்தடுத்து தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குனர்களாக இருப்பவர்களிடம் கதை கேட்டு வருவதாக சிவகார்த்திகேயன் பற்றி பல தகவல்கள் வெளியாகி வருகின்றன.

சமீபத்தில் இயக்குனர் அட்லியுடன் சிவகார்த்திகேயன் பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறாராம். அது பட சம்பந்தப்பட்ட பேச்சு வார்த்தை தான் என்று கோடம்பாக்கத்தில் கூறுகிறார்கள். ஏற்கனவே லோகேஷுடன் சிவகார்த்திகேயன் இணைய வாய்ப்பிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. ஒரு வேளை சிவகார்த்திகேயன் அட்லீ கூட்டணியில் படம் உருவாகும் பட்சத்தில் சிவகார்த்திகேயன் அடுத்து பாலிவுட்டிலும் காலடி எடுத்து வைப்பார் என சொல்லப்படுகிறது.


ஏனெனில் ஜவான் படத்திற்கு பிறகு பாலிவுட்டில் அட்லிக்கு என ஒரு தனி மார்க்கெட் இருந்து வருகிறது .அது மட்டுமல்ல தமிழிலிருந்து ஒரு சில நடிகர்களை பாலிவுட்டிற்கு அழைத்துக் கொண்டு செல்கிறார் அட்லி .இதில் சிவகார்த்திகேயனும் விதிவிலக்கல்ல. ஆனால் எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Tags:    

Similar News