கதைக்கு அழுத்தம் கொடுப்பாரே... சீனுராமசாமியின் கோழிப்பண்ணை செல்லத்துரை எப்பூடீ?

ஹீரோ முக்கியமல்ல. கதை தான் முக்கியம்..! இப்பவும்...

By :  sankaran
Update: 2024-09-20 10:30 GMT

யோகிபாபு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். ஏகன் புதுமுகம். என்.ஆர்.ரகுநாதன் இசை அமைத்துள்ளார். சீனுராமசாமியின் இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் கோழிப்பண்ணை செல்லத்துரை. எப்படி இருக்குன்னு பார்க்கலாமா...

கோழிப்பண்ணையில் வேலை செய்ற ஒரு கதாநாயகன். ஒரு ராணுவ வீரன் அவரு மனைவி குழந்தைகள் எல்லாம் ஊருல இருக்காங்க. அவரோட மனைவி வேறொருவன் கூட குழந்தைகளை விட்டுட்டு ஓடிப்போயிடறாரு. அவரு மறுபடியும் ஊருக்கு வர்றாரு. குழந்தைகளைப் பாட்டி வீட்ல விட்டுட்டு ஊருக்குப் போயிடறாரு. இந்தக் குழந்தைகளோட எதிர்காலம் என்னாகுது? எப்படி வளர்றாங்க? எந்த மாதிரியான சூழ்நிலைகளை சந்திக்கிறாங்க? ஓடிப்போன ரெண்டு பேரும் என்ன ஆனாங்க? இவ்வளவு தாங்க கதை. சீனு ராமசாமியோட பலமே அதுதாங்க.


மனித உறவுகளை சிக்கல்களை அழுத்தங்களை திரைப்படம் மூலமாக 2 மணி நேரம் சொல்லக்கூடிய திறமையான இயக்குனர். தென்மேற்குப் பருவக்காற்று படத்தில் கடந்து போகிற தாயின் அந்த உணர்வுகளைப் போகிற போக்கில் சொல்லிவிடுவார். அது 3 தேசிய விருதுகளைப் பெற்றது. குறிப்பாக கள்ளிக்காட்டுத் தாயே என்ற பாடல் பிரமாதம்.

இந்தப் படத்தின் மியூசிக் ரகுநாதன். புதுமுக நடிகர்களை வைத்துப் படம் பண்ணும்போது அது சிரமமான விஷயம். இதுல ஏகன் என்ற புதுமுகம். இவருக்கு புதுமுகம் என்ற பயமே இல்லை. தெள்ளத் தெளிவா பண்ணியிருக்காரு. அதுக்குக் காரணம் இயக்குனர். ஹீரோயின் பிரிகிடா. யூடியூப்பில் பிரபலமானவர். சில படங்களில் கதாநாயகி தோழி, வெப்சீரீஸ்னு முக்கியமானவர் இவர்.

வெற்றி பெற்ற ஹீரோவை வைத்துத் தான் பலரும் இயக்க விரும்புவர். புதுமுகங்களை வைத்து படம் பண்ணுவது சீனுராமசாமி மாதிரி ஒரு சிலர் தான். இவர்கள் கதையைத் தான் நம்புவார்கள். தேனி, மதுரை, ஆண்டிப்பட்டி தான் சூட்டிங்ஸ்பாட். ஒளிப்பதிவு பிரமாதமா இருக்கும்.

பிரிகிடா தேனி மாவட்ட பொண்ணாகவே வாழ்ந்துள்ளார். இசை அருமை. ரியாஸ் மீடியாவில் இருப்பவர் தான். அவர் படத்தில் ராணுவ வீரராக பிரமாதமாக நடித்துள்ளார். பாலுமகேந்திரா, பாரதிராஜா எல்லாரும் சாதாரண நடிகரிடம் இருந்து கூட பிரமாதமான நடிப்பை வாங்குவார்கள். பாலுமகேந்திராவின் சிஷயர் தான் சீனு ராமசாமி.

களிமண்ணைக்கூட நடிக்க வைக்கத் தெரிந்தவர் தான் நல்ல இயக்குனர். அப்படித் தான் ரியாஸிடம் இருந்தும் நல்ல நடிப்பை வாங்கி இருக்கிறார் சீனு ராமசாமி. சென்டிமென்ட், கதை, எமோஷனல் என ஒரு இயக்குனரா எந்த இடத்தில் சரியாகச் சொல்லணும்னு அருமையாகச் சொல்லி இருக்கிறார் சீனு ராமசாமி. மேற்கண்ட தகவலை பிரபல மூத்த பத்திரிகையாளர் செய்யாறு பாலு தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News