ஓடி ஓடி உதவும் சூர்யாவின் 2டி நிறுவனத்துல இப்படி ஒரு அநியாயமா? இதெல்லாம் தெரிஞ்சுதான் நடக்குதா?

சம்பளமே கொடுக்கலயா? சூர்யாவுக்கு இதெல்லாம் தெரியுமா?

By :  rohini
Update: 2024-09-20 10:49 GMT

முதன் முறையாக கார்த்திக் சுப்புராஜுடன் இணைந்து சூர்யா அவரது 44வது படத்தில் நடித்து வருகிறார். பெரும்பான்மையான படப்பிடிப்பு ஊட்டியில் நடைபெற்றது. இப்போது சென்னையில் ஒரு ஜெயில் செட் போட்டு படப்பிடிப்பு நடந்து வருகிறது. ஒரு கேங்ஸ்டர் ஸ்டைலில் இந்தப் படம் தயாராகி வருகிறது. செட் ஊழியர்கள் பெரும்பாலும் வெளி நாட்டிலிருந்து வரவழைக்கப்பட்டு பணியமர்த்தப்பட்டனர்.

இது சம்பந்தமான புகார் ஒன்று செய்தியாக வெளியானது. டூரிஸ்ட் விசாவில் வந்தவர்கள் இங்கேயே இருக்கிறார்கள் என அந்த புகாரில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்தப் படத்தில் சூர்யாதான் கேங்ஸ்டராக நடிக்கிறாராம். படத்தின் முதல் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை வெகுவாக ஈர்த்திருந்தது. இந்தப் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார்.

தமிழில் மிகவும் ராசியான நடிகை என்று பெயர் வாங்கியவர் இவர்தான். அதற்கு சாட்சியாக அவர் நடித்த படங்களை எடுத்து பார்த்தால் புரியும். இவர்களுடன் இணைந்து ஜெயராம், ஜோஜூ ஜார்ஜ், கருணாகரன், காளிதாஸ் ஜெயராம் போன்ற பல தமிழ் நடிகர்கள் நடித்து வருகின்றனர். இந்தப் படத்தின் மூலம் முதன் முறையாக ஜெயராமும் காளிதாஸ் ஜெயராமும் இணைந்து நடிக்கும் படமாகவும் சூர்யா 44 திரைப்படம் இருக்கிறது.

படத்திற்கு இசை சந்தோஷ் நாராயணன். ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்கிறார். இந்தப் படத்தின் முக்கிய செட்யூல் அந்தமானில் முடிக்கப்பட்டு படம் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. படத்தை சூர்யாவின் 2டி நிறுவனமும் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனமும் சேர்ந்துதான் தயாரிக்கிறது.

இந்த நிலையில் படத்தில் வேலை பார்த்த தொழிலாளி ஒருவர் இவ்ளோ நாள் படத்திற்காக வேலை செய்திருக்கிறேன். ஆனால் இதுவரை அதற்குரிய சம்பளம் எனக்கு கொடுக்கவில்லை என்று கூறியதாக ஒரு செய்தி வைரலாகி வருகின்றது. ஓரளவு படம் முடியும் தருவாயில் இருக்க இன்னும் அதற்கான ஊதியத்தை சம்பந்தப்பட்ட தொழிலாளிக்கு கொடுக்காதது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.

இவர் ஒருவருக்கு மட்டும்தான் இந்த நிலைமையா? அல்லது இன்னும் எத்தனை பேர் இருக்கிறார்கள்? இது சூர்யாவுக்கு தெரியுமா தெரியாதா என்று கோடம்பாக்கத்தில் பேசு பொருளாக இந்த சம்பவம் மாறியிருக்கிறது.

Tags:    

Similar News