விஜய், சூர்யா நடிக்காமல் போன கதை!.. லோகேஷ் - அமீர்கான் கூட்டணி உருவானதன் பின்னணி

By :  Rohini
Published On 2025-06-11 19:28 IST   |   Updated On 2025-06-11 19:28:00 IST

ameerkhan

இன்று ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாகி போனது. அதாவது பாலிவுட் நடிகர் அமீர்கான் அடுத்ததாக லோகேஷ் கனகராஜுடன் ஒரு படத்தில் நடிக்கப் போகிறேன் என மிகவும் அசால்ட்டாக சொல்லிவிட்டு சென்றார். இவ்வளவு பெரிய விஷயத்தை சாதாரணமாக சொல்லிட்டாரே என சமூக வலைதளங்களில் அனைவரும் அதைப் பற்றி பேசி வந்தனர்.

இதற்குப் பின்னணியில் அப்படி என்னதான் நடந்தது என்பதை பற்றி இன்று வலைப்பேச்சில் கூறி இருக்கிறார்கள். அமீர்கானுக்கு லோகேஷ் கனகராஜ் ஒரு கதை சொன்னது உண்மைதான். அது சூர்யாவுக்கு சொல்லப்பட்ட இரும்பு கை மாயாவி திரைப்படத்தின் கதையாக இருக்கலாம் என தெரிகிறது. ஏற்கனவே இதைப்பற்றி சூர்யா ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.

அதாவது இரும்பு கை மாயாவி திரைப்படம் எனக்கு வருமா வராதா என்று தெரியாது. அந்த படத்தின் கதையில் வேறு ஒரு பெரிய நடிகர் கூட நடிக்கலாம் .லோகேஷ் கனகராஜ் இதைப்பற்றி அமீர்கான் இடம் பேசி இருக்கிறார். அவருக்கும் இந்த கதை பிடித்து விட்டது. அதனால் இந்த படம் எனக்கு வருமா இல்லையா என்பது எனக்கு தெரியாது என சூர்யா ஏற்கனவே ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.

இப்போது அமீர்கான் சொன்ன பிறகு இது உண்மையாக இருக்கலாம் என தெரிகிறது. இரும்பு கை மாயாவி திரைப்படத்தை பொறுத்தவரைக்கும் அது ஒரு பேண்டஸி கதைக்களம் ஆகத்தான் உருவாக போகிறது. அதற்கும் மேல் இது லோகேஷ் கனகராஜின் கனவுத்திட்டம். இதை எப்படியாவது எடுத்து விட வேண்டும் என்ற முயற்சியில் பல ஆண்டுகளாக காத்திருக்கிறார் லோகேஷ் கனகராஜ்.

முதலில் விஜயை வைத்து எடுப்பதாக இருந்தது. அப்போதுதான் மாஸ்டர் கதையில் நடிக்க விஜய் ஒப்பந்தமானார். அதன் பிறகு தான் சூர்யாவுக்கு இந்த கதை சென்றது. சூர்யாவாலும் இந்த படத்தில் நடிக்க முடியவில்லை. அதனால் அமீர்கான் இந்த பேட்டியில் சொன்ன பிறகு ஒருவேளை இரும்புக்கை மாயாவி படமாக கூட இருக்கலாம் என கோடம்பாக்கத்தில் பேசி வருகிறார்கள். 

Tags:    

Similar News