1000 கோடி படம் எடுக்க என்னால முடியாது.. உடைத்து பேசிய மணிரத்னம்

By :  ROHINI
Update: 2025-05-24 10:50 GMT

manirathnam

பாக்ஸ் ஆஃபிஸில் 1000 கோடி கிளப்பில் இணைவது என சமீபகாலமாக பேசப்பட்டு வருகிறது. இப்போ நாம் கொஞ்சம் யோசித்து பார்த்தால் மணிரத்னம் இங்கதான் இருக்காரு. ஏஆர் ரஹ்மான் இங்கதான் இருக்காரு. ரஜினி, கமல் இங்க தான் இருக்காரு. ரவி கே சந்திரன், இளையராஜா எல்லாரும் இங்கதான் இருக்காங்க. நார்த் சைடில் இருந்து ஆஹானு பார்க்கக் கூடிய ஆள்கள் பெரும்பாலும் இங்கதான் இருக்காங்க.

அப்படி இருந்தாலும் இன்னும் 1000 கோடி கிளப்புக்குள் ஏன் போக முடியாம இருக்கிறது? அதை நீங்க எப்படி பார்க்கிறீங்க என தொகுப்பாளர் கோபிநாத் மணிரத்னத்திடம் கேட்டார். அதற்கு மணிரத்னம் கொடுத்த பதில் இதோ: எதுக்கு சினிமாவுக்குள்ள வந்தோம்? இருக்கிறதுலயே அதிகமாக கலெக்‌ஷன் பண்ணுகிற படங்களை எடுக்க வந்தோமா? இல்ல உண்மையா இருக்குற படம். இருக்குறதுலயே நல்ல படம்.

முன்பெல்லாம் ஒரு படம் ரிலீஸ் ஆனது எனில் நல்லா இருக்கு. நல்லா இல்லை. சுமாரா இருக்கு. போக போக புடிச்சிருக்கு இப்படித்தான் பேசிக்கிட்டு இருந்தோம். ஆனால் இப்போது 100 கோடி 500 கோடி 700 கோடி என அதுக்குள்ள நம்ம கவனம் போய்விட்டது. இது நம்முடைய கிரியேட்டிவிட்டியை கொன்றுவிடக் கூடாது. எனக்கு தெரிஞ்சு பல ஃபிலிம் மேக்கர்ஸ் அவங்க நினைச்ச படத்தை பண்ணனும்னுதான் வர்றாங்க.

அது ஓடினா நல்லது. அதுவும் 1000 கோடி தொட்டுச்சுனா இன்னும் சந்தோஷம். ஆனால் 1000 கோடிக்காக படம் எடுக்குறது என்பது என்னால முடியாது என மணிரத்னம் கூறியிருக்கிறார். தற்போது அவரது இயக்கத்தில் தக் லைஃப் படம் வெளியாக இருக்கிறது. கமல் மணிரத்னம் கூட்டணியில் கிட்டத்தட்ட 35 வருடங்கள் கழித்து இவர்கள் தக் லைஃப் படத்தின் மூலம் மீண்டும் இணைந்துள்ளனர்.

manirathnam

படம் ஜுன் 5 ஆம் தேதி ரிலீஸாக இருக்கின்றது. படத்தின் போஸ்டர் டிரெய்லர் பாடல் எல்லாம் வெளியாகி பெரும் ஹைப்பை ஏற்படுத்தியிருக்கிறது. முதன் முறையாக சிம்புவும் கமலும் இந்தப் படத்தில் இணைந்துள்ளனர். கமலுக்கு இணையான நடிப்பை இந்தப் படத்தில் சிம்பு வழங்கியிருக்கிறார். அதனால் படத்திற்கு கூடுதல் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. 

Tags:    

Similar News