கிங்காங் மகள் திருமணத்தை புறக்கணித்த பிரபலங்கள்!.. காரணம் இதுதானா!...
1990ம் வருடம் வெளிவந்த அதிசப்பிறவி படத்தில் ரஜினி டேப்ரிக்கார்டரில் போடும் போடும் பாடலுக்கு பிரேக் டான்ஸ் ஆடுவார் கிங்காங். ரஜினி பாடலை நிறுத்தி நிறுத்தி போட அதற்கேற்றார் போல் நடனமாடுவார். அப்படித்தான் கிங்காங் ரசிகர்களிடம் பிரபலமானார். இப்போது அவருக்கு 53 வயது ஆகிறது. இப்போதும் ஆக்டிவாக நடித்து வருகிறார்.
துவக்கம் முதலே காமெடி காட்சிகளில் நடித்து வருகிறார். குறிப்பாக வடிவேலுவுடன் பல படங்களில் நடித்திருக்கிறார். குறிப்பாக கந்தசாமி, போக்கிரி போன்ற படங்களில் இவரின் காமெடி ரசிகர்களை சிரிக்க வைத்தது. சினிமாவில் வாய்ப்பு இல்லை என்றால் தன்னுடைய குழுவை வைத்து நடன நிகழ்ச்சி போடுவார்.
அதில் ரஜினி, கமல், விஜயகாந்த் உள்ளிட்ட பல நடிகர்களை போலவும் நடனமாடி அசத்தி வருகிறார் சிறுக சிறுக சேர்த்தி சென்னையில் ஒரு சொந்த வீட்டையும் கட்டியிருக்கிறார். இவரின் மகளுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டதும் பல பிரபலங்களையும் நேரில் சென்று அழைத்தார். கர்நாடகாவுக்கு போய் சிவ்ராஜ்குமாருக்கு அழைப்பிதழ் கொடுத்தார்.
மேலும், முதல்வர் ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி, தமிழிசை சவுந்தர்ராஜன், அன்புமணி ராமதாஸ், சிவகார்த்திகேயன், விஷால், கார்த்தி, ஆர்.ஆர்.பிரியாணி நிறுவனர். எஸ்.ஆர்.எம் பாரி வேந்தர், யோகிபாபு, பிரேமலதா விஜயகாந்த், விஜய் சேதுபதி, லதா ரஜினிகாந்த், டி.ராஜேந்தர் உள்ளிட்ட பலருக்கும் பத்திரிக்கை வைத்தார்.
நேற்று காலை திருமணம் நடந்த நிலையில் மாலை வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், முதல்வர் ஸ்டாலின், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார். தமிழிசை, விஷால், டி.ராஜேந்தர் உள்ளிட்ட சிலர் மட்டுமே கலந்துகொண்டனர். மற்றபடி சின்ன சின்ன காமெடி நடிகர்கள் வந்தார்கள். ஆனால், பெங்களூருக்கு பயணம் செய்து பத்திரிக்கை வைத்த சிவ்ராஜ்குமார் வரவில்லை. அதேபோல், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, கார்த்தி, லதா ரஜினிகாந்த், அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட யாரும் கலந்துகொள்ளவில்லை.
கிங்காங் ஒன்றும் பிரபலமான பெரிய நடிகர் இல்லை. சின்ன காமெடி நடிகர்தான். அதனால்தான் அவர் தேடிப்போய் பத்திரிக்கை வைத்தும் பலரும் அங்கு போகவில்லை என ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் விமர்சித்து வருகிறார்கள்.