சுந்தர்.சி-யும் பேன் இண்டியால சிக்கிட்டாரே!.. மூக்குத்தி அம்மன் 2 பட்ஜெட் இவ்வளவு கோடியா!..

By :  Murugan
Update:2025-03-15 21:00 IST

Mookuthi amman 2: கோலிவுட்டில் மிகவும் குறைவான பட்ஜெட்டில் திரைப்படங்களை இயக்கி தயாரிப்பாளருக்கு லாபத்தை பெற்று கொடுக்கும் இயக்குனர்களில் சுந்தர்.சி. மிகவும் முக்கியமானவர். காமெடி, காதல் கலந்த குடும்ப செண்டிமெண்ட் கதைகளை மட்டுமே அதிகமாக திரைப்படமாக எடுப்பார். இவரின் படத்தில் காமெடிக்கு பஞ்சமிருக்காது.

அதனால்தான் சுந்தர்.சி படமென்றால் குடும்பத்துடன் சென்று படம் பார்ப்பார்கள். 30 வருடங்களாக தொடந்து திரைப்படங்களை இயக்கி வருகிறார். மிகவும் குறைவான பட்ஜெட், குறைவான நாட்களில் படப்பிடிப்பு, ஆனால், அதிகமான லாபம் என்பதே இவரின் ஸ்டைல். ஒரு கட்டத்தில் ஆன்மிகம் கலந்த பேய் படங்களை எடுக்க துவங்கினார்.

அப்படி அவர் எடுத்த அரண்மனை நான்கு பாகங்களும் சூப்பர் ஹிட் அடித்து நல்ல வசூலை பெற்றது. அடுத்து அரண்மனை 5 எடுக்கும் முயற்சியில் இருந்தபோதுதான் மூக்குத்தி அம்மன் 2 படம் அவரை தேடி வந்தது. இந்த படத்தின் முதல் பாகத்தை ஆர்.ஜே.பாலாஜி இயக்கி நடிக்க, இதில் நயன்தாரா அம்மனாக நடித்திருந்தார்.


போலீச்சாமியார்கள் பக்தியின் பெயரில் மக்களை எப்படி ஏமாற்றுகிறார்கள். என்பதை அடிப்படையாக வைத்து ஆர்.ஜே.பாலாஜி இப்படத்தை உருவாக்கியிருந்தார். இப்போது இப்படத்தின் இரண்டாம் பாகத்தை சுந்தர்.சி இயக்குகிறார். சமீபத்தில் இப்படத்தின் பூஜை நடந்தபோது நயன்தாராவும் இதில் கலந்துகொண்டார்.

இப்படத்தை வேல்ஸ் இண்டர்நேஷனல் ஐசரி கணேஷ் தயாரிக்கவுள்ளார். இப்படம் பற்றி பேசும்போது சுமார் 55 கோடி பட்ஜெட்டில் எடுப்பது என முடிவெடுத்திருக்கிறார்கள். ஆனால், நயன்தாரா உள்ளே வந்தது, பேன் இண்டியா படமாக எடுக்கும் போது ஆகும் செலவு என எல்லாம் சேர்த்து இப்போது கணக்கு போட்டால் 112 கோடி பட்ஜெட் என முடிவெடுத்திருக்கிறார்களாம்.

எனவே, சுந்தர்.சி இதுவரை இயக்கிய படங்களில் மூக்குத்தி அம்மன் 2 படம்தான் அதிக பட்ஜெட்டில் உருவாகவுள்ளது. இந்த படத்தில் நயன்தாராவுக்கு சம்பளத்தோடு லாபத்தில் குறிப்பிட்ட சதவீதம் பங்கும் உண்டு என பேசியிருக்கிறார்களாம். அதோடு, மற்ற மொழிகளிலிருந்து நடிகர்களை இறக்கி பேன் இண்டியா படமாக மாற்றி தமிழ், தெலுங்கும், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் வெளியிட திட்டமிட்டிருக்கிறார்களாம்.

Tags:    

Similar News