‘குட் பேட் அக்லி’யில் அதுக்கு வாய்ப்பே இல்ல.. ஆதிக் தலைகீழா தொங்கினாலும் அஜித்திடம் செல்லாது
விடாமுயற்சி படத்திற்கு பிறகு அஜித் நடித்துள்ள படம் குட் பேட் அக்லி. இந்தப் படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியிருக்கிறார். ஜிவி பிரகாஷ் படத்திற்கு இசையமைத்திருக்கிறார். படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. மார்க் ஆண்டனி என்ற ஒரு பெரிய வெற்றிக்கு பிறகு ஆதிக் இயக்கியுள்ள படம்தான் குட் பேட் அக்லி. இன்னொரு பக்கம் புஷ்பா 2 படத்தின் மெகா வெற்றிக்கு பிறகு மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள திரைப்படமாகவும் குட் பேட் அக்லி அமைந்துள்ளது.
அதனால் குட் பேட் அக்லி படத்தின் மீது பெரிய அளவில் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. படத்தின் டீஸர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தின் டிரெய்லர் இந்த மாதம் கடைசியில் வெளியாக உள்ளது. அதோடு படத்தின் முதல் சிங்கிள் வரும் 18 ஆம் தேதி வெளியாக உள்ளது. குட் பேட் அக்லி படம் ஏப்ரல் 10 ஆம் தேதி உலகெங்கிலும் ரிலீஸாக இருக்கின்றது.
250 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள இந்தப் படம் கலெக்ஷனில் சாதனை படைக்க வேண்டும் என்ற முயற்சியில் ஒட்டுமொத்த படக்குழுவும் தீவிரமாக இறங்கியிருக்கின்றனர். மேலும் தமிழ் நாட்டில் 1000 திரையரங்குகளில் குட் பேட் அக்லி படத்தை ரிலீஸ் செய்யும் திட்டத்திலும் இருக்கிறார்கள். அஜித்தின் முந்தைய படங்களை விடவும் அதிகப்படியான தியேட்டர்களில் குட் பேட் அக்லி படத்தை ரிலீஸ் செய்ய போகிறார்களாம்.
இந்த நிலையில் குட் பேட் அக்லி படத்தில் கேமியோ ரோலில் பெரிய செலிபிரிட்டி ஒருவர் நடிக்க போவதாக சமீபகாலமாக ஒரு தகவல் வெளியாகிக் கொண்டே வருகிறது. அது சிம்ரன் அல்லது ஷாலினியாக இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. இதை பற்றி வலைப்பேச்சு அந்தணனிடம் கேட்ட போது செலிபிரிட்டி என்ற லிஸ்ட்டில் சிம்ரனை வைக்க முடியாது. ஏனெனில் அவருக்கு இப்போது மார்கெட்டே இல்லை. அவர் ஒரு முன்னாள் நடிகை. அவ்வளவுதான்.
அவங்க இந்தப் படத்துல நடிக்கிறதால ஏதாவது பிளஸ் இருக்கானு பார்த்தால் அப்படி எதுவும் இல்லை. இன்னொரு பக்கம் ஷாலினி என்றும் சொல்லிக் கொண்டு வருகிறார்கள். அப்படி இருந்தால் அது சூப்பர். அவங்க ஒரு செலிபிரிட்டி. அதுவும் அஜித்தின் மனைவி. நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு நடிக்க வர்றாங்க. அதுவும் அஜித் படத்தில் எனும் போது அந்த காட்சியை ரசிகர்கள் எப்படி கொண்டாடுவார்கள்னு தெரியும்.
ஆனால் அஜித்திடம் ஷாலினிக்கு ஒரு ஸ்கிரீன் ஸ்பேஸ் கொடுங்கனு ஒரு இயக்குனர் கேட்கிறார் என்று வைத்துக் கொள்வோம். கண்டிப்பாக அஜித் ஒத்துக்கவே மாட்டார். அப்போ அஜித் பெண்ணடிமைத்தனத்தை முன்னுறுத்துகிறாரா என்று கேட்கக் கூடாது. அஜித் அவருடைய மனைவியை மிகவும் அன்பாக பார்த்துக் கொள்கிறார். ஷாலினியை கொண்டு வந்து ஒரு நாள் ஷூட்டிங்கில் நிறுத்தி உடனே அவங்கள பார்ப்பதற்கு ஒரு கும்பல் வருவதை அஜித் விரும்பமாட்டார்.
அப்படி நடித்து படக்குழு ஒரு பெரிய தொகையை ஸ்பெஷலாக கொடுத்தாலும் அதை ஏற்கிற மன நிலையில் அஜித்தும் இருக்க மாட்டார். ஷாலினியும் இருக்க மாட்டார். அப்போ இதை யாரோ ஒருவர் அந்தப் படத்துல ஷாலினி நடிக்கிறாங்கனு ஒரு புரளியை கிளப்பி விட்டிருக்கிறார்கள். என்னை பொறுத்தவரைக்கும் நான் விசாரித்த வரைக்கும் ஷாலினி இந்தப் படத்தில் இல்லை என்பதுதான் நிஜம் என அந்தணன் கூறினார்.