நாகார்ஜுனாவிடம் பலமுறை அடி வாங்கிய விஜய் பட நடிகை.. டெடிகேஷனு சொல்லி இப்படி ஆயிடுச்சே?
nagarjuna
சினிமாவை பொறுத்தவரைக்கும் எடுக்கும் காட்சி தத்ரூபமாக இருக்க வேண்டும் என்பதற்காக சில ரிஸ்க்குகளை எடுப்பது அவசியமாகிறது. அதனால்தான் ஸ்டண்ட் காட்சிகளில் முன்னணி ஹீரோக்கள் டூப் போடாமல் நடிக்க முன்வந்தாலும் அதில் உள்ள ரிஸ்கை அறிந்த ஸ்டண்ட் மாஸ்டர்கள் டூப் போட்டு நடிக்க வைத்து விடுகின்றனர். அதில் ஒரு சில நடிகர்கள் எல்லாரும் மனிதர்கள்தானே என நினைத்து அவர்களே நடித்துக் கொடுப்பதும் உண்டு.
அப்படி ஒரு காட்சி தத்ரூபமாக இருக்க வேண்டும் என்பதற்காக நாகர்ஜூனா பிரபல நடிகையை பல முறை கன்னத்தில் அறைந்து சிவக்கும் அளவுக்கு செய்திருக்கிறார். அவர் வேறு யாருமில்லை. நடிகை இஷா கோபிகர். விஜய் நடிப்பில் 1999 ஆம் ஆண்டு வெளியான நெஞ்சினிலே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர்தான் இஷா கோபிகர். மனசே மனசே குழப்பம் என்ன பாடலை யாராலும் மறக்க முடியாது.
அதில் விஜய் இஷா கோபிகர் கெமிஸ்ட்ரி அற்புதமாக இருக்கும். அதுமட்டுமில்லாமல் பிரசாந்துடன் காதல் கவிதை, அரவிந்த்சாமியுடன் என் சுவாசக்காற்றே, விஜயகாந்துடன் நரசிம்மா என சூப்பர் ஹிட் படங்களில் நடித்து ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்றார். அதன் பிறகு அவரை கோலிவுட்டில் பார்க்க முடியவில்லை. நீண்ட இடைவெளிக்கு பிறகு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான அயலான் படத்தின் மூலம் தமிழுக்கு ரீ எண்ட்ரி கொடுத்தார் இஷா கோபிகர்.
நாகர்ஜூனாவுடன் சந்திரலேகா படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போது ஒரு காட்சியில் நாகர்ஜூனா இஷா கோபிகர் கன்னத்தில் அறையவேண்டுமாம். அந்தக் காட்சி சரியாக வராததால் பல முறை டேக் எடுக்கப்பட்டிருக்கிறது. தத்ரூபமாக வர வேண்டும் என்பதற்காக 14 முறை அந்த காட்சி எடுக்கப்பட்டதாம் .அதனால் 14 முறை நாகர்ஜூனா இஷா கோபிகர் கன்னத்தில் பளார் என அறைய வேண்டிய சூழ்நிலை.
isha
இதில் இஷா கோபிகர் கன்னத்தில் நாகர்ஜூனாவின் அனைத்து விரல்களும் பதிந்து விட்டதாம். இதை ஒரு பேட்டியில் இஷா கோபிகரே கூறியிருக்கிறார். தற்போது கூலி படத்தில் முக்கிய வில்லனாக நாகர்ஜூனா நடித்திருக்கிறார்.