மூக்குத்தி அம்மன்2 பூஜையில் வெறித்தனம்… படத்துக்கு நயன் செய்யும் தியாகம்… ஆரம்பிச்சிட்டாங்களா?
Mookuthi Amman2: நயன்தாரா நடிப்பில் உருவாக இருக்கும் மூக்குத்தி அம்மன்2 படத்தின் பூஜை இன்று பிரம்மாண்டமாக நடந்து இருக்கும் நிலையில் அதன் முக்கிய தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
தமிழ் சினிமாவில் வெளியான முக்கிய திரைப்படம் மூக்குத்தி அம்மன். இதை ஆர்.ஜே.பாலாஜி இயக்கி இருந்தார். வசூல் ரீதியாக குறைவு என்றாலும் விமர்சன ரீதியாக வெற்றி படமாகவே அமைந்தது. தற்போது இதன் இரண்டாம் பாகம் தொடங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் இன்று பிரசாத் ஸ்டூடியோவில் மூக்குத்தி அம்மன் 2 பூஜை கோயில் செட்டப்பில் மிகப் பிரமாண்டமாக நடந்திருக்கிறது. இந்த பூஜையில் முக்கிய பிரபலங்கள் கலந்து கொண்டிருக்கின்றனர். மேலும் நிகழ்ச்சியில் பேசிய தயாரிப்பு நிறுவனரான வேல்ஸ் ஐசரி கணேஷ், இந்த படத்தை பேன் திரைப்படமாக இயக்குகிறோம்.
இப்படத்தில் சுந்தர் சி ஒப்பந்தமான பின்னர் தன்னிடம் ஒரு மாதம் டைம் கேட்டார். அதற்குள் படத்தின் மொத்த திரைக்கதையும் எழுதி எடுத்து கொண்டு வந்தார். இவ்வளவு சீக்கிரமாக ஒரு ஸ்கிரிப்ட் நான் பார்த்ததே இல்லை. நயன்தாரா இந்த படத்திற்காக ஒரு மாதம் விரதம் இருக்கிறார்.
100 கோடி பட்ஜெட்டில் இந்த படம் தொடங்கப்பட்டிருக்கிறது. தமிழ் உள்ளிட்ட பலமொழிகளில் இந்த திரைப்படம் தற்போது வெளியாக இருப்பதும் குறிப்பிடத்தக்கது. பொதுவாக நடிகை நயன்தாரா தன்னுடைய திரைப்படத்தின் எந்த ஒரு பட விழாவிற்கும் வரமாட்டார்.
ஆனால் தற்போது மூக்குத்தி அம்மன் 2 மிகப் பிரமாண்டமாக தொடங்கி இருக்கும் நிலையில் தனிநாயகி கதை என்றாலும் இப்படத்தின் பூஜையில் விழாவிற்கு ஆஜராகி இருப்பது பலரை ஆச்சரியப்படுத்தி இருக்கிறது. இப்படத்தில் ஹிப்ஹாப் ஆதி இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்.