இயக்குனர் மனைவி போட்ட பதிவு.. சமந்தாவின் கழுத்தை நெரிக்கும் நெட்டிசன்கள்
samantha
தென்னிந்திய சினிமாவில் நம்பர் ஒன் நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை சமந்தா. தற்போது சமந்தா ஒரு இயக்குனருடன் டேட்டிங் செய்து கொண்டிருப்பதாக தகவல் வந்து கொண்டிருக்கும் நிலையில் இதற்கு பின்னணியில் உள்ள காரணம் என்ன என்பது பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. நடிகை சமந்தா கடந்த 2001 ஆம் ஆண்டு நாகசைதன்யாவிடம் இருந்து விவாகரத்து பெற்ற நிலையில் அதன் பிறகு உடல் நலம் சரியில்லாமல் பாதிக்கப்பட்டார்.
இதனால் தொடர்ந்து அவர் படங்களில் நடிக்க முடியாமல் போனது. அந்த சூழ்நிலையில் சமந்தாவுக்கு ஒரு கம்பேக்காக அமைந்த வெப் சீரிஸ்தான் தி ஃபேமிலி மேன் 2. அதன் தொடர்ச்சியாக சிட்டாடெல் ஹனி பெனி என்ற வெப் சீரிஸிலும் நடித்தார். இந்த இரண்டு வெப் சீரிஸும் சமந்தாவுக்கு ஒரு நல்ல தொடக்கத்தை கொடுத்தது. இந்த இரண்டு வெப் சீரிஸையும் இயக்கிய இயக்குனர்தான் ராஜ் நித்தி மூரு.
இந்த இயக்குனருடன் தான் சமந்தா டேட்டிங்க் செய்வதாக கூறப்பட்டு வருகிறது. இதில் இயக்குனர் ராஜ் பொறுத்தவரைக்கும் கடந்த 2015 ஆண்டுதான் ஷாமிலி என்ற உதவி இயக்குனரை திருமணம் செய்திருக்கிறார். இவர்களது திருமணம் கடந்த 2022 ஆண்டோடு முடிந்துவிட்டதாகவும் தன் மனைவியிடம் இருந்து விவாகரத்து பெற்றுவிட்டதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.
வெப் சீரிஸில் நடித்துக் கொண்டிருக்கும் போது ராஜுக்கும் சமந்தாவுக்கும் இடையே நட்பு ஏற்பட்டதாகவும் அது இப்போது காதலாக மாறியிருப்பதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது. இதில்தான் இப்போது சர்ச்சையே கிளம்பியிருக்கிறது. நாக சைதன்யா சமந்தாவிடம் இருந்து விவாகரத்து பெற்றதும் சோபிதாவுடன் டேட்டிங்க் செய்வதாக தகவல் வெளியானது.
இது ஆரம்பகாலத்தில் வதந்தி என்று சொல்லப்போனாலுமே அதுதான் உண்மையாகவுமே இருந்தது. இருவருமே கடந்தாண்டு டிசம்பர் மாதம் பிரம்மாண்ட முறையில் திருமணம் செய்து கொண்டார்கள். அந்த நேரத்தில் சமந்தாவின் ரசிகர்கள் ஆதரவாளர்கள் முன்னாடி இருந்தே நாக சைதன்யாவும் சோபிதாவும் டேட்டிங் செய்ததால்தான் சமந்தா பிரிந்தார் என்று கூறினார்கள். ஆனால் இதை நாகசைதன்யா பலமுறை மறுத்தார்.
samantha
தற்போது இருக்கும் சூழ் நிலையில் சமந்தா மட்டும் என்ன செய்து கொண்டிருக்கிறார்? ஏற்கனவே திருமணமான இயக்குனரை டேட் செய்து கொண்டிருக்கிறார் என்று சமந்தாவுக்கு எதிராக கூறி வருகிறார்கள் .இது உண்மையா பொய்யா என்று தெரியாத சூழ் நிலையில் இயக்குனருடன் சமந்தா இருக்கும் புகைப்படங்கள் அடிக்கடி சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. சமீபத்தில் கூட ஃபிளைட்டில் இயக்குனர் ராஜ் தோளின் மீது சமந்தா செல்ஃபி எடுக்கும் மாதிரியான புகைப்படம் வெளியானது.
இந்த சூழ்நிலையில் ராஜுவின் முன்னாள் மனைவி ஷாமிலி தனது ஸ்டோரியில் ஒரு பதிவை போட்டிருக்கிறார். என்னை பற்றி சிந்திக்கும் சந்திக்கும் மனிதர்கள் என்னை பற்றி பேசும் மனிதர்கள் பார்க்க வரும் மனிதர்களை நேசிக்கிறேன் என அந்த ஸ்டோரியில் போட்டிருக்கிறார். இதனை அடுத்துதான் சமந்தா ராஜ் இவர்களின் இந்த உறவை பற்றித்தான் அவரது முன்னாள் மனைவி இப்படி மறைமுகமாக கூறியிருக்கிறார் என்று சொல்கிறார்கள்.