மதராஸி படத்தின் விலை இவ்வளவு கோடியா?!.. அமரன் ஹிட்டுதான்.. அதுக்காக இப்படியா?!...

By :  MURUGAN
Update: 2025-05-19 12:29 GMT

Madharasi: திரையுலகை பொறுத்தவரை ஒரு நடிகரின் பட வியாபாரம் என்பது அவரின் முந்தைய படம் எவ்வளவு வசூல் செய்திருக்கிறது என்பதை பொருத்தே நிர்ணயம் செய்வார்கள். அதாவது, முந்தைய படம் நல்ல வசூலை பெற்றால் அடுத்த படத்தை நல்ல விலைக்கு கேட்பார்கள். இல்லையெனில், மிகவும் குறைவான விலைக்கு கேட்பார்கள்.

அதே நேரம், அது எப்படிப்பட்ட கதை, யார் இயக்குனர் என்பதை வைத்தும் கொஞ்சம் முடிவு செய்வார்கள். சிவகார்த்திகேயனை பொறுத்தவரை அவரின் அமரன் படம் சூப்பர் ஹிட் அடித்து 300 கோடி வரை வசூல் செய்துவிட்டது. பொதுவாக, ஒரு படத்தின் மொத்த வசூலை வைத்து தயாரிப்பாளருக்கு லாபம் என சொல்ல முடியாது. அப்படத்தை வாங்கி வெளியிட்ட வினியோகஸ்தர்களுக்கும், தியேட்டர் அதிபர்களுக்கும் எவ்வளவு லாபம் வந்தது என்பதை பார்க்க வேண்டும்.

சினிமா வட்டாரத்தில் அதை ஷேர் என சொல்வார்கள். அமரன் படத்தை பொறுத்தவரை ஷேர் மட்டுமே 75 கோடி வந்தது. இதைத்தான் இப்போது சம்பளமாக கேட்கிறார் சிவகார்த்திகேயன். அமரன் படத்தில் நடிப்பதற்கு முன்பே ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மதராஸி என்கிற படத்தில் நடித்தார் சிவகார்த்திகேயன். அந்த படம் 70 சதவீதம் எடுக்கப்பட்ட நிலையில் அமரன் படத்தில் நடிக்கப்போனார்.


ஏனெனில், பாலிவுட்டில் சல்மான்கான் படத்தை இயக்கும் வாய்ப்பு வந்ததால் அங்கு போனார் ஏ.ஆர்.முருகதாஸ். அப்படி வெளியான சிக்கந்தர் படம் பாக்ஸ் ஆபிசில் மண்ணை கவ்வியது. சிவகார்த்திகேயன் இப்போது சுதா கொங்கரா இயக்கத்தில் மதராஸி படத்தில் நடிக்கப்போனார். ஆனால், அந்த பாடமும் பாதி எடுத்த நிலையில் அப்படியே நிற்கிறது.

இந்நிலையில், மதராஸி படத்தின் தமிழக வெளியீட்டு உரிமை 65 கோடி என சொல்கிறாராம் தயாரிப்பாளர். ஆனால், அமரனில் நடந்த மேஜிக் மதராஸி படத்திலும் நடக்குமா என வினியோகஸ்தர்கள் யோசிக்கிறார்களாம். அமரனை பொறுத்தவரை அது இந்திய இராணுவத்தில் பணிபுரிந்த முகுந்த் வரதராஜன் என்பவரின் கதை. அதனால் செண்டிமெண்ட் காரணமாகவே அப்படம் ஓடியது.

ஆனால், முருகதாஸ் இயக்கியுள்ள மதராஸி படத்தில் அது நடக்க வாய்ப்பில்லை என்கிறார்கள்.

Tags:    

Similar News