விஜய்னா யாருன்னு கேட்ட சூப்பர்ஸ்டார்.... தயாரிப்பாளர் சொன்ன அந்தத் தகவல்

By :  Sankaran
Update: 2024-12-18 02:59 GMT

பைரவி படத்தை ரஜினியை வைத்து இயக்கியவர் எம்.பாஸ்கர். இவரது மகனும் தயாரிப்பாளருமாக இருப்பவர் பாலாஜி பிரபு. இவர் ரஜினி, விஜய் குறித்து என்ன சொல்றாருன்னு பார்க்கலாமா...

ஆரம்பத்துல 25 படம் வில்லனாவே நடிச்சிக்கிட்டு இருந்தாரு ரஜினி. அவருக்கு வில்லனாகவே லைஃப் ரொம்ப ஜாலியாகப் போச்சு. ஹீரோ கிளிக் ஆகலன்னா நமக்கு கெரியர் போயிடும்னு நினைச்சாரு. அப்புறம் அப்பாவும், கலைஞானம் சாரு அவருக்கிட்ட பேசி நடிக்க வச்சாங்க.

தாணு சார் இந்தப் படத்துக்கு விநியோக உரிமையை வாங்கினார். கலைஞானம் சார் தயாரிப்பாளர். இந்தப் படத்துக்குத் தான் சூப்பர்ஸ்டார்னு தாணு சார் பட்டம் கொடுத்தாரு. முதல்ல வேணாம்னு சொன்னாரு. அப்புறம் தாணு சார்தான் இருக்கட்டும். அது நிலைச்சி நிற்கும்னு சொன்னாரு.

ரஜினி சாரை ஹீரோவா அறிமுகப்படுத்துனாருங்கறது எங்க அப்பா எம்.பாஸ்கர்தான்னு நினைக்கிறப்போ பெருமையா இருக்கு. ரஜினி நல்ல நடிகர். அவருக்கிட்ட நல்ல நடிப்புத்திறமை இருந்தது. தப்புத்தாளங்கள், ஆறிலிருந்து அறுபது வரை, முள்ளும் மலரும் படங்களை எடுக்கும்போது தெரியும். அதனால அவர் வில்லன்ல இருந்து ஹீரோவா வரும்போது அவருக்கு அந்த சுவடுகள் தெரியல.

முதன்முதலா ஒரு அவுட்சைடு பேனர்ல விஜய் நடிச்சது எங்க படம்தான். ஆஸ்கர் மூவீஸ்ல வெளியான விஷ்ணு. நான் தான் தயாரிப்பாளர். இது எனக்கு பெரிய பெருமை தரும் விஷயம். அன்னைக்கு சின்ன நடிகராக இருந்த என்னை நடிக்க வைச்ச ஆஸ்கர் மூவீஸ்சுக்கு நன்றின்னு விஜயே கைபட கடிதம் எழுதினாரு. ரஜினி சாரை அந்தப் படத்துப் பூஜைக்கு வரதுக்காக அழைப்பு கொடுத்தோம்.


அப்போ 'ஹீரோ யாரு'ன்னு கேட்டாரு. விஜய்னு சொன்னேன். 'விஜயகாந்தா..'ன்னு கேட்டாரு. 'நியூ ஃபேஸா...'ன்னு கேட்டாரு. 'இல்ல சார். எஸ்.ஏ.சி. சார் பையன்'னு சொன்னேன். 'ஓ...ஓ... நான் கேள்விப்பட்டுருக்கேன்'னாரு. 'ஓகே ஓகே. நான் கண்டிப்பா வர்றேன்'னாரு. அவரு சொன்ன மாதிரியே வந்து குத்துவிளக்கு ஏற்றி வச்சாரு. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 

எங்க அப்பா ரஜினியை ஹீரோவா வச்சி முதன்முதலா இயக்குனது எங்களுக்குப் பெருமை. அதே மாதிரி விஜயை வச்சி அவுட்சைடு பேனர்ல முதன் முதலா நாங்க தயாரிச்சது எங்களுக்குப் பெருமை. அன்னைக்கு என்ன சின்ன நடிகன்னு சொன்ன விஜய் இன்னைக்கு இவ்ளோ பெரிய ஆளா உயர்ந்து நிக்கிறாரு. அவரு கண்டிப்பா அரசியல்ல ஜெயிச்சி முதல்வரா ஆகணும் என்கிறார் பாலாஜி பிரபு.

Tags:    

Similar News