வைரமுத்துவின் தில்லாலங்கடி வேலை.. ஒரே வரியில் மூணு பாட்ட முடிச்சு விட்டாரே
vairamuthu
தமிழ் சினிமாவில் மிகவும் புகழ்பெற்ற கவிஞராக விளங்கி வருபவர் கவிஞர் வைரமுத்து. இதுவரை 7500க்கும் மேற்பட்ட பாடல்களுக்கு வரிகளை எழுதியிருக்கிறார். வெற்றிகரமான கவிஞராக வலம் வந்தாலும் தமிழ் மீது கொண்ட பற்றால் நாவல்கள், கவிதை தொகுப்புகள் என நிறையவே எழுதியிருக்கிறார். இவருடையய நூல்கள் பல பிற மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டிருக்கின்றன.
ஏராளமான கவிதைகளை எழுதிய வைரமுத்து இதுவரை 7 முறை தேசிய விருதை வென்றுள்ளார். கள்ளிக்காட்டு இதிகாசம் நூலுக்காக சாகித்ய அகாடமி விருதையும் வென்றார். இது பெரிய அளவில் பேசப்பட்டது. எண்ணற்ற விருதுகளை வென்ற வைரமுத்துவை கவிப்பேரரசு என பெயரிட்டவர் கருணாநிதி. 64 வயதில் அடியெடுத்து வைக்கும் வைரமுத்து மணிரத்னம் படங்களுக்கு பல பாடல்களை எழுதியிருக்கிறார்.
அதே போல் ஏஆர் ரஹ்மான் கூட்டணியில் உருவான இவரது பாடல்கள் ப்ளாக் பஸ்டர் ஹிட்டாகியிருக்கின்றன. மணிரத்னம், ஏஆர் ரஹ்மான், வைரமுத்து என்றாலே ஒரு வலிமையான கூட்டணிதான். இவருடைய வரிகளில் தேன் சொட்டும். இத்தனை பெருமைக்குரிய வைரமுத்து ஒரே வரியில் மூன்று பாடல்களை கொடுத்திருக்கிறார். அதுதான் அதிர்ச்சி. இதை யாரும் சரிவர கவனிக்கவில்லை.
அது எந்தெந்த பாடல், யார் நடித்த படம் என்பதை பற்றி இங்கு பார்ப்போம். அஜித் நடிப்பில் கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் வெளியான திரைப்படம் வரலாறு. இந்தப் படத்தில் அஜித் மூன்று வேடங்களில் நடித்திருப்பார். இந்தப் படம் அஜித்துக்கு பெரியளவில் கிரடிட்ஸை பெற்றுக் கொடுத்தது. இந்தப் படத்தில் அமைந்த ‘இளமை விடுகதை’ பாடல் அஜித்துக்குண்டான அறிமுக பாடலாகும்.
வைரமுத்து வரிகளில் வந்த இந்தப் பாடலில் ஒரு வரி வரும். அதாவது ‘மண்ணில் இருக்கும் புதையலை செயற்கை கோள் அறியும்.. பெண்ணில் இருக்கும் புதையலை இயற்கை தான் அறியும்ஹோய்’. அதே போல் ஷ்யாம், அசின், லைலா நடிப்பில் வெளியான உள்ளம் கேட்குமே படத்தில் என்னை பந்தாட என்ற பாடல் வரும். அதிலும் இதே மாதிரியான வரியை வைரமுத்து பயன்படுத்தியிருக்கிறார்.
‘மண்ணிலுள்ள வளம் இன்னதின்னதென செயற்கைக்கோள் அறியும் பெண்ணே உன்னிலுள்ள வளம் என்னதென்னதென உள்ளங்கை அறியும் கண்ணே’.இதே வரியைத்தான் விஜய் பாடலிலும் பயன்படுத்தியிருக்கிறார் வைரமுத்து. விஜய் நடித்த தமிழன் படத்தில் ல ல ல லா முடிச்சோம் பாடலில் ‘அட மன்னில் உள்ள பொருள் என்ன என்னவென்று செயற்கை கோள்கள் தேடும் ஒரு பெண்ணில் உள்ள பொருள் என்ன என்னவென்று எங்கள் கண்கள் தேடும்’ என்ற அதே வரிதான் வருகிறது.