கோர்த்துவிட்ட படக்குழு... ரஜினியிடம் போனில் பேசிய சீமான்... இப்படி ஒரு விஷயம் வேற நடந்திருக்கா!...

வேட்டையன் திரைப்படத்தை பார்த்துவிட்டு சீமான் நடிகர் ரஜினியிடம் ஃபோனில் பேசி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது.

By :  ramya
Update: 2024-10-30 13:30 GMT

rajini

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்துடன் வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். தொடர்ந்து 73 வயதான நிலையிலும் ஹீரோவாக நடித்து அசத்தி வருகின்றார். இளம் நடிகர்களுக்கு டப் கொடுக்கும் வகையில் அடுத்தடுத்த திரைப்படங்களில் கமிட்டாகி சுறுசுறுப்பாக நடித்து வருகின்றார். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் வேட்டையன்.

ஜெய் பீம் திரைப்படத்தை இயக்கியிருந்த ஞானவேல் இயக்கத்தில் உருவான திரைப்படம் வேட்டையன். போலி என்கவுண்டருக்கு எதிரான இப்படத்தில் ரஜினிகாந்த் உடன் அமிதாப்பச்சன், மஞ்சுவாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன், ராணா டகுபதி, பகத் பாஸில் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள்.

மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் கடந்த 10ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆன இந்த திரைப்படம் எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பை பெறவில்லை. கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும் சிறந்த வசூலை பெற்று கொடுத்ததாக தயாரிப்பாளர் தரப்பில் கூறப்படுகின்றது. இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். மேலும் படத்தின் பாடல்கள் வெளியாகி மக்களிடையே சிறந்த வரவேற்பை பெற்றிருந்தது.

இந்த திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இந்த திரைப்படத்தில் பல நல்ல கருத்துக்கள் கூறப்பட்டிருந்தது. இப்படத்தை பார்த்துவிட்டு நாம் தமிழர் கட்சியின் தலைவரான சீமான் படக்குழுவினர்களை ஃபோனில் அழைத்து பேசியிருக்கின்றார். பேசிக் கொண்டிருக்கும்போது இருங்கள் ஒரு முக்கியமான நபரை கான்பிரன்ஸ் எடுக்கின்றேன் என்று கூறியிருக்கிறார்கள்.

சீமானும் படத்தின் தயாரிப்பாளரான சுபாஸ்கரன் அவர்களுக்கு தான் போன் செய்ய போகிறார்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கையில் திடீரென்று நடிகர் ரஜினிகாந்த் அவர்களுக்கு போன் செய்து விட்டார்களாம். சீமானும் முதலில் சொல்லுங்க சுபாஸ்கரன் எப்படி இருக்கிறீர்கள் என்று கேட்க நான் ரஜினி பேசுகிறேன் என்று சொன்னதும் சீமானுக்கு மிகப்பெரிய அதிர்ச்சி. பின்னர் ஐயா எப்படி இருக்கிறீர்கள் என்று கூறி பேச தொடங்கினாராம்.

மேலும் படம் குறித்தும் அவர் நடிப்பு குறித்தும் பாராட்டு தெரிவித்து இருக்கின்றார் சீமான். இதுபோல நல்ல கதைகளை தேர்வு செய்து நீங்கள் தொடர்ந்து நடிக்க வேண்டும் என்று சீமான் கூறியிருக்கின்றார். இதை கேட்ட நடிகர் ரஜினிகாந்தும் நானும் தொடர்ந்து நல்ல கதைகளை கேட்டுக் கொண்டிருக்கிறேன். உங்கள் வாழ்த்துக்கு நன்றி என தெரிவித்திருந்தாராம் ரஜினிகாந்த். இதனை வலைப்பேச்சு யூடியூப் சேனலில் அந்தணன் தெரிவித்து இருக்கின்றார்.

Tags:    

Similar News