பாக்ஸ் ஆபீஸில் பட்டையை கிளப்பும் படைத்தலைவன்!.. யானையுடன் விளையாடும் கேப்டன் மகன் வீடியோ பாடல்!..

“ உசுருக்கு உசுராக என்கிற வீடியோ பாடலை தற்போது படைத்தலைவன் படக்குனு யூட்யூப் சேனலில் வெளியிட்டுள்ளது.;

By :  SARANYA
Published On 2025-06-15 21:00 IST   |   Updated On 2025-06-15 21:00:00 IST

கேப்டன் விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் நடிப்பில் இந்த வாரம் வெளியான படைத்தலைவன் திரைப்படம் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் 2.18 கோடி ரூபாய் வசூலை அள்ளி உள்ள நிலையில், ஞாயிற்றுக்கிழமை இன்றும் 2 கோடிக்கும் மேல் வசூல் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய் நடித்த கோட் திரைப்படத்துக்கு பிறகு மீண்டும் விஜயகாந்தை ஏஐ தொழில்நுட்பம் மூலமாக இந்த படத்தில் கொண்டு வந்துள்ளனர். கேப்டன் விஜயகாந்தை மீண்டும் பார்க்கவே ரசிகர்கள் தியேட்டருக்கு படையெடுத்து வருவதாக கூறுகின்றனர்.


புதிய படங்கள் பெரிதாக வசூல் செய்ய முடியாமல் தவித்து வரும் நிலையில், படைத்தலைவன் திரைப்படம் தினமும் ஒரு கோடிக்கு மேல் வசூல் செய்வது சிறப்பான ஒன்று என்கின்றனர்.

இளையராஜா இசையில் படைத்தலைவன் திரைப்படத்தில் இடம் பெற்ற பாடல்கள் அனைத்தும் மனதை வருடும் விதமாக உள்ளதாக கூறப்பட்டு வரும் நிலையில், “ உசுருக்கு உசுராக என்கிற வீடியோ பாடலை தற்போது படைத்தலைவன் படக்குனு யூட்யூப் சேனலில் வெளியிட்டுள்ளது.

கும்கி படத்தில் யானையுடன் விக்ரம் பிரபு நடித்ததை போலவே, இந்த படத்திலும் சண்முக பாண்டியன் யானையுடன் கொஞ்சி விளையாடும் காட்சிகளும், அதன் மீது ஏறிக்கொண்டு சவாரி செய்வது, ஆத்துக்கு அழைத்துச் சென்று அதை குளிப்பாட்டுவது, குடும்பத்துடன் ஒருவராகவே அனைவரும் ஒன்றாக வெளியே யானையுடன் சேர்ந்து இரவு உணவை உண்பது, பானை செய்யும் அப்பாவுக்கு உதவி செய்வது என ஏகப்பட்ட அழகான காட்சிகளும் அருமையான பாடல் வரிகளுடன் உள்ள நிலையில், பாடல் முழுவதுமே கேட்பதற்கு காதுகளுக்கு இதமாக உள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

படைத்தலைவன் திரைப்படத்தை தொடர்ந்து சண்முக பாண்டியன் நடித்து வந்த கொம்புச் சீவி திரைப்படம் மொத்த படப்பிடிப்பும் நிறைவடைந்த நிலையில், விரைவில் அந்த படமும் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. சின்ன கேப்டன் என மக்கள் சண்முக பாண்டியன் அழைக்க ஆரம்பித்துள்ளனர். அப்பாவின் பெயரை காப்பாற்றும் விதமாக நல்ல கதைகளை தேர்வு செய்து, நல்ல நடிப்பையும் சண்முக பாண்டியன் வழங்க வேண்டும் என ரசிகர்கள் விருப்பம் தெரிவித்து வருகின்றனர்.


Full View


Tags:    

Similar News