குட் நியூஸ் சொன்ன ஷாரிக்-மரியா… அட அதுக்குள்ள இப்படி சர்ப்ரைஸ் கொடுத்தா இப்படி!
Shariq: பிரபல நடிகை உமா ரியாஸின் மகனும், நடிகருமான ஷாரிக் மற்றும் மனைவி மரியா சொல்லி இருக்கும் குட் நியூஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது.
பிக்பாஸ் தமிழ் சீசன்2 நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர் ஷாரிக். இவர் பிரபல நடிகை உமா ரியாஸ் மற்றும் நடிகர் ரியாஸ்கானின் மூத்த மகன். ஷாரிக் சில படங்களிலும் நடித்து இருக்கிறார். பிக்பாஸ் ஜோடிகள் சீசன் 1ல் டைட்டிலை அனிதா சம்பத்துடன் வென்றார்.
சமீபத்தில் இவர் தன்னுடைய காதலி மரியாவை இரு மத முறைப்படி திருமணம் செய்து கொண்டார். இவர்கள் திருமணத்தின் போதே மரியா, ஷாரிக்கை விட மூத்த வயதில் இருப்பதாக ரசிகர்களிடம் கிசுகிசுக்கள் பரவியது. இருந்தும் முதலில் ஷாரிக் தரப்பு இதுகுறித்து பேசவே இல்லை.
பின்னர், ஷாரிக் மற்றும் மரியா இருவரும் திருமணத்துக்கு பின்னர் பேட்டி கொடுத்தனர். ஏற்கனவே திருமணமான மரியாவிற்கு 8 வயதில் மகள் இருப்பதாகவும், தான் ஷாரிக்கை விட வயதில் மூத்தவர் என்பதையும் தெரிவித்தார்.
முதலில் தனக்கு திருமணத்தின் மீதே நம்பிக்கை இல்லை. ஏனெனில் வருபவர் என்னை பாத்துக்கொள்வதை விட என் மகளை நன்றாக பார்த்து கொள்ள வேண்டும். அதனால் ஷாரிக் என்னிடம் காதலை சொன்ன போது கூட நான் முதலில் மறுத்துவிட்டேன்.
ஆனால் அவர் என்னை பார்த்துக்கொண்டதை விட என் மகளை ஒரு அப்பாவாக பார்த்து கொண்டார். என்னுடைய மாமியார் உமா ரியாஸ் மற்றும் மாமனார் ரியாஸ் கான் கூட அவளை பேத்தியாக பார்த்து கொண்டனர். அதை தொடர்ந்தே நான் அவர் காதலுக்கு ஓகே சொன்னேன் என்ற உண்மையை உடைத்தார்கள்.
தொடர்ந்து சில மாதங்கள் கடந்து இருக்கும் நிலையில் ஷாரிக் மற்றும் மரியா இருவரும் தங்களுடைய காதல் வாழ்க்கையில் அடுத்த அத்தியாயத்தை தொடங்கி இருப்பதாக கூறி கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை அழகான வீடியோவுடன் வெளியிட்டு இருக்கின்றனர்.