ஆட்டத்தை ஆரம்பித்த சிம்பு.. கைமாறும் வெற்றிமாறன் படம்.. ஒரே அக்கப்போரு

By :  Murugan
Published On 2025-07-28 19:49 IST   |   Updated On 2025-07-28 19:52:00 IST

vetrimaran

பொதுவாக நடிகர்கள் ஒரு படத்தை நடிக்க ஒப்புக்கொண்டால் சம்பளம் பேசி ஷூட்டிங் முடிந்து படம் வெளியாகும். ஒருவேளை படம் பாதியில் டிராப் ஆனாலோ அல்லது படத்தை ரிலீஸ் செய்ய முடியாமல் போனாலோ அதற்கு கண்டிப்பாக அப்படத்தின் ஹீரோ காரணமாக இருக்க மாட்டார். ஆனால் சிம்பு இதற்கு விதி விலக்கு.

இவர் நடிப்பில் துவங்கப்படும் படங்களுக்கு ஏதேனும் பிரச்சனை வந்தால் அதற்கு சிம்பு மட்டுமே காரணமாக இருப்பார். AAA, மாநாடு போல இவர் நடிப்பில் உருவான பல படங்கள் பல பஞ்சாயத்துகளை பார்த்திருக்கிறது. இப்போது இதே பிரச்சனை வெற்றிமாறன் படத்திற்கும் வந்திருக்கிறது.

கலைப்புலி தாணு தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்க சிம்பு நடிக்க புதிய திரைப்படம் ஒரு மாதத்திற்கு முன்பு துவங்கியது. வடசென்னை படத்தின் கிளைக்கதையாக இப்படம் உருவானது. வேகவேகமாக பிராமோஷன் ஷுட் எல்லாம் நடந்தது. சிம்புவும் அதில் கலந்துகொண்ட புகைப்படங்கள் கூட வெளியானது.

ஆனால், தற்போது படத்தை பற்றி எந்த அப்டேட்டும் இல்லை. ஷுட்டிங்கும் நடக்கவில்லை. மேலும் புரமோ ஷுட் வீடியோவும் வெளியாகவில்லை. இந்நிலையில் இந்த படமும் சிக்கலை சந்தித்திருக்கிறது. படம் துவங்கியபோது 10 கோடியை மட்டும் அட்வான்ஸாக வாங்கிக்கொண்டு மீதியை படத்தின் வசூலில் குறிப்பிட்ட சதவீதத்தை வாங்கிக் கொள்கிறேன் என சிம்பு பேசியிருந்தார்.

இப்போது திடீரென தனக்கு 30 கோடி அட்வான்ஸாக வேண்டும் எனக் கேட்டதால் தாணு ஜெர்க் ஆகி விட்டாராம். அதோடு வெற்றிமாறனும் சம்பளத்தை சேர்த்து கேட்டதால்தான் படம் அடுத்த கட்டத்திற்கு நகராமல் நிற்பதாக சொல்லப்படுகிறது.

Tags:    

Similar News