சூர்யா 45 படத்தின் வில்லனாக இவரா? ஓ இந்த ரோலுனா மாஸா இருக்குமே!...

சூர்யா படத்தின் வில்லன்;

By :  Akhilan
Update: 2025-01-05 07:03 GMT

suriya45

Suriya45: நடிகர் சூர்யா நடிப்பில் அடுத்து உருவாக இருக்கும் 45 வது படத்தின் வில்லன் குறித்த அப்டேட் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை ஆச்சரியமடைய செய்திருக்கிறது.

எதற்கு துணிந்தவன் திரைப்படத்திற்கு பின்னர் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியது கங்குவா திரைப்படம். பல்லாயிரம் கோடி வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் படம் மிகப்பெரிய தோல்வியை தழுவியது.

இதை தொடர்ந்து நடிகர் சூர்யா தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரெட்ரோ படத்தில் நடித்து முடித்து இருக்கிறார். இப்படத்தின் கடைசி கட்ட பணிகள் நடந்து வரும் நிலையில் வரும் ஏப்ரல் மாதத்தில் திரைப்படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

இப்படத்தை தொடர்ந்து நடிகர் சூர்யா தற்போது தொடர்ச்சியாக கோலிவுட்டில் கவனம் செலுத்த தொடங்கி இருக்கிறார். அதன்படி அவன் நடிப்பில் அடுத்து சூர்யா45 தயாராக இருக்கிறது. இப்படத்தினை நடிகரும், இயக்குனருமான ஆர்.ஜே.பாலாஜி இயக்க இருக்கிறார்.

முதலில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க இருந்த இப்படத்துக்கு தற்போது சாய் அபியங்கர் இப்படத்தினை இசையமைத்து வருகிறார். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கோயமுத்தூர் கல்லூரியில் நடந்து முடிந்திருக்கிறது. தற்போது இந்த வாரத்தின் தொடக்கத்தில் இருந்து சென்னையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பை படக்குழு தொடங்குகிறது.

இப்படத்தில் நடிகர் சூர்யாவுக்கு எதிராக வில்லனாக களமிறங்குகிறார் படத்தின் இயக்குனர் ஆர்.ஜே பாலாஜி. இவருக்கு இப்படத்தில் பவர்ஃபுல்லான வக்கீல் வேடம் கொடுக்கப்பட்ட இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் இப்படம் ஏதோ ஒரு சமூக கருத்தை பேச இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி வருகிறது.

பெரிய அளவில் சண்டை காட்சிகள் இல்லாமல் வார்த்தை போரில் இரண்டு பேருமே வித்தியாசமான கேரக்டர்களில் களமிறங்குவதால் சூர்யா 45 திரைப்படத்திற்கு தற்போதைய ரசிகர்களிடம் வரவேற்பு அதிகரித்து இருக்கிறது.

Tags:    

Similar News