எஸ்கே 23 படத்துக்கு முதல்ல வச்ச டைட்டில் இதுவா?.. பெயரை மாத்துனதுக்கு இப்படி ஒரு காரணமா?..
Actor Sivakarthikeyan: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக மாறி இருக்கின்றார் நடிகர் சிவகார்த்திகேயன். இதற்கெல்லாம் முக்கிய காரணம் அமரன் திரைப்படம் தான். இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நம் நாட்டிற்காக வீர மரணம் அடைந்த ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜன் அவர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம் அமரன். இந்த திரைப்படம் கடந்த தீபாவளி பண்டிகைக்கு வெளியாகிய மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
அமரன் திரைப்படம்: அமரன் திரைப்படம் சிவகார்த்திகேயனின் கெரியரில் ஒரு முக்கிய படமாக மாறி இருக்கின்றது. இப்படம் வெளியாகி ரசிகர்களிடையே தொடர்ந்து பாசிடிவ் விமர்சனங்களை பெற்று வந்த காரணத்தால் பாக்ஸ் ஆபிஸில் 360 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்தது. சிவகார்த்திகேயனின் திரை வாழ்க்கையில் அதிகம் வசூல் செய்த திரைப்படமாக அமரன் திரைப்படம் மாறி இருக்கின்றது.
இப்படத்திற்கு பிறகு தொடர்ந்து பெரிய பெரிய திரைப்படங்களில் நடிப்பதற்கு வாய்ப்புகள் குவிந்து கொண்டிருக்கின்றது. இதனால் சினிமாவில் முன்னணி நடிகர் என்கின்ற இடத்தை பிடித்திருக்கின்றார் நடிகர் சிவகார்த்திகேயன்.
ஏஆர் முருகதாஸ்-எஸ்.கே கூட்டணி: அமரன் திரைப்படத்தை முடித்த கையோடு நடிகர் சிவகார்த்திகேயன் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் எஸ்கே23 என்கின்ற திரைப்படத்தில் நடித்து வந்தார். இந்த திரைப்படம் விறுவிறுப்பாக எடுக்கப்பட்டு வந்தது. இதற்கு இடையில் ஏ ஆர் முருகதாஸ் பாலிவுட்டில் சல்மான்கானை வைத்து சிக்கந்தர் என்கின்ற திரைப்படத்தை இயக்கி வரும் நிலையில் அதனை முடித்துவிட்டு மீண்டும் இந்த திரைப்படத்திற்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
ஏனென்றால் இப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் 40 நாட்கள் பாக்கி இருப்பதாக கூறப்படுகின்றது. அதிலும் நடிகர் சிவகார்த்திகேயனின் போர்ஷன் 15 நாட்கள் மட்டுமே மீதம் இருப்பதாக சினிமா விமர்சகர்கள் கூறி வருகிறார்கள்.
மதராஸி டைட்டில்: நடிகர் சிவகார்த்திகேயனின் பிறந்த நாளை முன்னிட்டு நேற்று இந்த திரைப்படத்தின் டைட்டிலை படக்குழுவினர் வெளியிட்டு இருந்தார்கள். இந்த படத்திற்கு மதராஸி என பெயர் வைக்கப்பட்டிருக்கின்றது. படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களுடைய நல்ல வரவேற்பை பெற்றிருக்கின்றது. நிச்சயம் இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றி படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
மேலும் இந்த திரைப்படத்திற்கு முதலில் ஹண்டர் என்று பெயரை வைப்பதற்கு முடிவு செய்து இருக்கிறார்கள். தமிழில் இதற்கு வேட்டையன் என்று அர்த்தம். இந்த டைட்டில் ஏற்கனவே தமிழ் சினிமாவில் பயன்படுத்தப்பட்ட காரணத்தால் மகராஸி என்கின்ற பெயர் பொருத்தமாக இருக்கும் என்று எண்ணி இதனை வைத்ததாக கூறப்படுகின்றது.
அதுமட்டுமில்லாமல் இந்த படத்திற்கு ஸ்டாலின் என்கின்ற தலைப்பும் ஏ ஆர் முருகதாஸ் பரிசீலணையில் இருந்திருக்கின்றது. ஆனால் தற்போது தமிழக முதல்வரின் பெயர் என்பதால் அதனை வைத்தால் எதுவும் பிரச்சனையாகி விடக்கூடாது என்பதற்காக அந்த பெயரையும் தவிர்த்து விட்டதாக சினிமா விமர்சகர்கள் கூறியிருக்கிறார்கள்.