வெற்றிமாறன் சிம்பு கூட்டணி நடக்குமா? இவ்ளோ பிரச்சினை இருக்கும் போது எப்படி?

By :  Rohini
Published On 2025-06-08 20:48 IST   |   Updated On 2025-06-08 20:48:00 IST

simbu

சமீபகாலமாக சிம்புவை வைத்து வெற்றிமாறன் ஒரு படம் எடுக்கப்போவதாக ஒரு தகவல் வெளியாகி கொண்டு வருகின்றது. இது எந்த அளவுக்கு உண்மை என்பதைப் பற்றி வலைப்பேச்சு பிஸ்மி ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார். சிம்பு வெற்றிமாறன் காம்போ என்பது இன்னும் உறுதிப்படாத ஒரு காம்போ. அது ஒரு வதந்தியாகவே பரவி வருகின்றன. தற்போது வாடிவாசல் திரைப்படத்தில் தான் வெற்றிமாறனின் கவனம் இருக்கிறது.

ஆனாலும் அதுவும் இப்போது நடக்குமா நடக்காதா என்ற ஒரு இழுபறிதான் இருக்கின்றன. ஏனெனில் வாடிவாசல் திரைப்படத்தை பொருத்தவரைக்கும் ஈகோ என்ற ஒரு விஷயம் தொடர்ந்து இருந்து கொண்டே வருகின்றன. வெற்றிமாறனை பொறுத்த வரைக்கும் வாடிவாசல் திரைப்படத்தில் அமீர் இருக்க வேண்டும் என விரும்புகிறார். சூர்யா தரப்பில் அமீர் இருப்பது அவர்களுக்கு சங்கடத்தை தருகிறது.

சூர்யா கேரக்டரில் யார் வேண்டுமானாலும் நடிக்கலாம். ஆனால் அமீர் கேரக்டரில் அமீர்தான் நடிக்க வேண்டும் என வெற்றிமாறன் நினைக்கிறார். வாடிவாசல் திரைப்படத்திற்கு பிறகு வெற்றிமாறன் வடசென்னை படத்தில் கவனம் செலுத்தப் போகிறார். அந்த படத்தை ஐசரி கணேஷ் தான் தயாரிக்கப் போகிறார். வடசென்னை திரைப்படம் அடுத்த வருடம் தான் ஆரம்பிக்க போகிறது.

இதற்கிடையில் சிம்பு வெற்றிமாறன் என்பது நடப்பதற்கான வாய்ப்பே கிடையாது. அது வெறும் வதந்தி தான் என பிஸ்மி கூறி இருக்கிறார். ஆனால் இன்றைய தேதியில் வெற்றிமாறனுக்கு சூர்யா தேவைப்படுகிறார், சூர்யாவுக்கு வெற்றிமாறன் தேவைப்படுகிறார். ஏனெனில் விடுதலைப் படம் வணிக ரீதியாக பெரிய அளவில் போகவில்லை. அதனால் ஒரு பெரிய வணிக வெற்றியை கொடுக்க வேண்டும் என்றால் சூர்யாவை வைத்து வெற்றிமாறன் ஒரு படத்தை கொடுக்க வேண்டும்.

அதே நேரம் சூர்யாவுக்கும் வணிக ரீதியாக எந்த படமும் வெற்றி அடையவில்லை. அதனால் வெற்றிமாறன் இயக்கத்தில் நடித்தால் அந்தப் படம் பெரிய அளவில் போகும். அதனால் இவருக்கு அவர் தேவை. அவருக்கு இவர் தேவை. இந்த ஈகோ பிரச்சனை எல்லாம் விட்டுவிட்டு இருவரும் சேர்ந்து படம் பண்ணினால் தான் நல்லது என பிஸ்மி கூறி இருக்கிறார்.

Tags:    

Similar News