Thuglife 2nd single: தக்லைஃப் சுகர் பேபி யாரு தெரியுமா? கமல் சிம்புவை வெறுப்பேற்றுகிறாரா?
கமல், சிம்பு இருவரும் மணிரத்னம் இயக்கத்தில் சேர்ந்து நடித்துள்ளதால் தக் லைஃப் படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்தப் படத்தில் கமலுக்கு இணையாக சிம்புவுக்கு கேரக்டர் உள்ளது. மேலும் படத்தின் டிரெய்லரைப் பார்க்கும்போது வில்லனாக சிம்பு தான் வருவார் என்று தெரிகிறது.
அதனால் ரசிகர்கள் மத்தியில் மேலும் ஹைப் ஏறியுள்ளது.தக் லைஃப் படத்தின் செகண்ட் சிங்கிள் சுகர் பேபி நேற்று வெளியானது. இது குறித்து பிரபல தயாரிப்பாளர் பாலாஜி பிரபு ஒரு சில தகவல்களைத் தெரிவித்துள்ளார்.
தக் லைஃப் படத்துக்கு ஜூன் 1ம் தேதி துபாயில் பிரம்மாண்டமாக புரொமோஷன் நடைபெற உள்ளது. ஜூன் 5ல படம் ரிலீஸ் ஆகிறது. கமலுக்கு அபிராமி ஜோடி. சிம்புவுக்கு திரிஷா ஜோடின்னு சொன்னாங்க. டிரெய்லர் வந்த பிறகு கமலுக்கு தான் அபிராமி, திரிஷா ஜோடியாக இருக்காங்க.
சிம்பு பேச்சிலரான்னு பேச்சு அடிபட்டுது. உடனே மணிரத்னம் ஏதாவது ஒரு சஸ்பென்ஸ் வச்சிருப்பாருன்னு சொன்னாங்க. சுகர் பேபி செகண்ட் சிங்கிள். ஹாலிவுட்ல நிறைய சுகர்பேபி, சுகர் டேடின்னு படங்கள், வெப்சீரிஸ் வந்தபோது அது ஒரு கெட்டவார்த்தை.
அவங்களுக்கு அது நல்ல வார்த்தை. அதாவது வயதான ஆண்களுக்கு இல்லீகலான பெண்களைத் தான் சுகர் பேபின்னு குறிப்பிடுவாங்க. அப்படின்னு சொன்னபோது ஓகே திரிஷா கமலுக்குத்தான் என்பது உறுதியாகிவிட்டது. சிம்புவுக்கு ஜோடி இல்லை. கமல் கூட ஏன் திரிஷா இல்லீகலா இருக்காங்க. அபிராமி தான் வைஃபா எனவும் பேச்சு வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
விண்ணைத் தாண்டி வருவாயா படத்தில் சிம்பு திரிஷாவுடன் நெருக்கமாக நடித்து இருந்தார். படம் நல்லா ரீச் ஆனது. ஒருவேளை சிம்புவை வெறுப்பேற்றத் தான் திரிஷாவுடனும் ஜோடி சேர்ந்துள்ளாரா கமல் என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.