தக் லைஃப்ல யாருமே எதிர்பார்க்காத டுவிஸ்ட்..! கமலுக்கு உள்ள சினிமா தாகம்!
கமல், சிம்பு இணைந்து நடிக்க, மணிரத்னம் இயக்கத்தில் வரும் ஜூன் 5ல் வெளியாக உள்ள படம் தக் லைஃப். படத்தின் புரொமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. சமீபத்தில் ஆடியோ லாஞ்ச் நடந்தது. படத்தைப் பற்றிய பல தகவல்கள் வந்து கொண்டு இருக்கின்றன. அந்த வகையில் மூத்த பத்திரிகையாளர் சுபையர். வேறு என்ன சொல்றாருன்னு பார்க்கலாம்.
லைஃப் படத்து டிரெய்லர்ல நிறைய ரெஃபரன்ஸ், டீகோடிங் இருக்கு. நாயகன் பார்ட் 2வான்னு இருந்தது. படத்துல மகன் கேரக்டர்ல சிம்பு பண்ணப்போறதா சொன்னாங்க. ஆனா அவருக்கே வில்லன் மாதிரி காட்டுறாங்க. அதுல திரிஷா கமலுக்கு ஜோடி மாதிரி தெரியுது. சிம்புவுக்கு ஜோடி இல்லையான்னு கேள்வி வருது. ஆனா இது எல்லாமே டிரெய்லர்ல இருக்கும். படத்துல நீங்க எதிர்பார்க்காத கதையா இருக்கும்.
நிறைய டுவிஸ்ட் இருக்கும். இதுவரைக்கும் எனக்கு தெரிஞ்சி மணிரத்னம் டோட்டலா இறங்கி இப்ப உள்ள ஸ்டைலுக்குப் பண்ணிருக்காருன்னு நினைக்கிறேன். லோக்கலா இறங்கி ஆக்ஷன்ல ஒரு படம் பண்றேன்னு சொல்லி வச்சிப் பண்ற மாதிரி இருக்கு. 8 பாட்டும் ஹிட்டு தான் என்கிறார் சுபையர்.
மணிரத்னம் படத்துல நடிக்கிறதுக்கு சிம்பு ரொம்ப ஆர்வம் காட்டுவார். இது எதுக்குன்னா அவரோட படம்னா எல்லாமே கரெக்டா இருக்கும் என்பதுதான். அதாவது ஒரு டைரக்டருக்கு தான் நினைக்கிறதை அப்படியே பண்ணக்கூடிய ஆர்டிஸ்ட் வேணும். சிம்பு அதை 100 சதவீதம் சரியா பண்ணக்கூடியவர். அதே போல ஒரு ஆர்டிஸ்ட்டுக்கு டைரக்டர் சொல்றது புரியணும். இந்த ரெண்டுமே மிங்கிள் ஆச்சுன்னா அந்த விஷயம் பார்க்குறதுக்கு நல்லாருக்கும்.
மணிரத்னத்தைப் பொருத்தவரைக்கும் முதல்ல என்ன எழுதுறாரோ அதுதான். அதுல இருந்து மாத்த மாட்டாரு. அதுக்கு ஏத்தமாதிரி எல்லாத்தையும் ரெடி பண்ணிடுவாரு. அது சிம்புவுக்கும் ஈசியா இருக்கு. ஏற்கனவே சிம்பு சில டைரக்டர் ஸ்பாட்ல வச்சித்தான் சீனையே யோசிக்கிறாங்கன்னு சொல்லிருக்காரு. அதனால அவங்க சொல்ற நேரத்துக்கு சிம்புவால படப்பிடிப்புக்குப் போக முடியல.
இன்னைக்கு நாம யூஸ் பண்ற எல்லா டெக்னாலஜியும் கமல் கொண்டு வந்ததுதான். வீடியோ கேமராவுல படம் எடுக்கலாம்னு சொல்றாரு. யாருமே நம்பல. உடனே அவரே அதை பரிசோதனை முயற்சியாக மும்பை எக்ஸ்பிரஸ் படத்தை எடுக்குறாரு. அதுக்கு அப்புறம் பிலிமே கிடையாது. எல்லாமே டிஜிட்டல் ஆச்சு. அதே மாதிரி ஆவிட் எடிட்டிங். அதை முதன்முதல்ல மகாநதி படத்துலதான் யூஸ் பண்ணுனாரு.
பிலிமை போய் எப்படி கம்ப்யூட்டர்ல எடிட் பண்ணுவீங்கன்னு கேட்குறாங்க. அப்போ கமல்தான் டெமோ பண்ணிக் காட்டுனாரு. மேக்கப் சொல்லவே வேணாம். எல்லாமே அவரு கொண்டு வந்ததுதான். சினிமாவைப் பத்தின தாகம் இருந்துக்கிட்டே இருக்கும். இப்ப கூட 65 வருட சினிமா அனுபவத்துல அவருக்கு இன்னும் கத்துக்கணும்கற ஆர்வம் இருக்கு. அதனால தான் அமெரிக்காவுல போய் AI கத்துக்கப் போறாரு.
தக் லைஃப் படத்துக்கு புரொமோஷனே தேவையில்லை. மணிரத்னம் இருக்காரு. கமல்ஹாசன்னு ஒரு பேரு இருக்கு. இதுவே பெரிய புரொமோஷன்தான் என்கிறார் சுபையர்.