நடிப்பை நிறுத்திய வழக்கு… சிக்கலில் உதயநிதி… இந்த படம் நியாபகம் இருக்கா?
Udhayanithi: தமிழ் சினிமா ஹீரோவாக இருந்த உதயநிதி ஸ்டாலின் பாதியிலேயே படத்தை முடிக்காமல் நடிப்பை நிறுத்தியது குறித்து தொடரப்பட்ட வழக்கின் விசாரணையில் புதிய அறிவிப்பு வந்துள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்தவர் உதயநிதி ஸ்டாலின். ஓகே ஓகே படத்தின் மூலம் பிரபலமடைந்தார். தொடர்ச்சியாக நடிப்பில் கவனம் செலுத்தி வந்தவர். அரசியலில் அமைச்சராக பதவி பெற்ற பின்னர் நடிப்பில் இருந்து விலகினார்.
இவரின் கடைசி திரைப்படமாக மாமன்னன் படம் இருக்கிறது. ஆனால் அதற்கு முன்னரே உதயநிதி நடிக்க, ஆனந்தி, பாயல் ராஜ்புத் மற்றும் யோகிபாபு நடித்திருந்த திரைப்படம் ஏஞ்சல். இப்படத்தினை இயக்குனர் கே.எஸ்.அதியமான் இயக்கி இருந்தார்.
ஏஞ்சல் படத்தை 2018ம் ஆண்டில் படப்பிடிப்பு துவங்கி, 80 சதவீத படப்பிடிப்பு நிறைவடைந்த பின்னர் திடீரென நடிப்பில் இருந்து உதயநிதி விலகினார். படத்திற்கு 13 கோடி இதுவரை செலவு செய்யப்பட்டு இருக்கிறது. வெறும் 8 நாட்கள் கொடுக்காமல் நடிப்பில் இருந்து விலகினார்.
இதற்காக படத்தின் தயாரிப்பாளர் 25 கோடி இழப்பீடு கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதற்கான விசாரணை நடந்து வந்தது. முதலில் இந்த வழக்கு தள்ளிப்படி செய்யப்பட்டது. மீண்டும் படத்தின் தயாரிப்பாளர் ஓ.எஸ்.டி. பிலிம்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ராமசரவணன் மேல்முறையீடு செய்தார்.
இந்த வழக்கின் விசாரணை நடந்து இருக்கும் நிலையில் உதயநிதி ஸ்டாலின் பதில் அளிக்க உத்தரவிடப்பட்டு இருக்கிறது. மேலும் இந்த வழக்கின் விசாரணை மார்ச் 18ந் தேதி நடைபெற இருக்கிறது. இதுகுறித்து அடுத்த கட்ட தீர்ப்பு என்னவாக இருக்கும் என கோலிவுட் வட்டாரத்தில் பேச்சுகள் எழுந்துள்ளது.