வாணி ராணி ஜெனிப்ரியாவுக்கே இந்த நிலையா? 50 பவுனை ஆட்டையைப் போட்ட சிங்கப்பூர் மாப்ளே..?!

பிரபல நடிகை ஜெனிப்பிரியா சிங்கப்பூர் மாப்பிள்ளையிடம் ஏமாந்தாரா? அதிர்ச்சி தகவல்கள்

By :  sankaran
Update: 2024-10-25 04:30 GMT

வாணி ராணி சீரியலில் நடித்த பிரபல நடிகை ஜெனிப்பிரியா. இவர் அழகு தொடரிலும் நடித்துள்ளார். இவரை சாரான்னும் சொல்வாங்க. தமிழ்த்திரை உலகில் தமிழ்ப்படம் 2ல் நடித்துள்ளார். மேக்கப் பயிற்சி வகுப்புகளையும் நடத்தினார். பிக்பாஸ்ல கலக்குன ஜூலிக்கும் அவரோட போட்டோ ஷூட்டுக்கு இவர் தான் மேக்கப் போட்டாராம்.

இவருக்கும் சிங்கப்பூரைச் சேர்ந்த பைலட் துநேசன் என்பவருக்கும் திருமணம் உறுதியானது. நலங்கு நிகழ்ச்சியும் சென்னையில் தடபுடலாக நடந்தது. நவம்பர் 8 மற்றும் 11ல் ரிசப்ஷன்னும் சொன்னாங்க.

ஜெனிப்ரியாவோட பெஸ்ட் பிரண்ட்ஸ்சுக்கு எல்லாம் கல்யாணத்துல கலந்துக்க ப்ளைட் டிக்கெட்லாம் போட்டாச்சு. ஆனா திடீர்னு கல்யாணம் நின்னு போச்சு. என்னடான்னு விசாரிச்சா ஜெனிப்ரியாவே இப்படி சொல்லிட்டாங்க.

திட்டமிட்டு என்னை துநேசம் குடும்பம் ஏமாத்திட்டாங்க. மேட்ரிமோனில தான் பழக்கம். டைவர்ஸ் ஆனவர். அதற்கான பேப்பர்களைக் காட்டினார். 2 பையனோடு கஷ்டப்படுறாரேன்னு ஓகே சொல்லிட்டேன்.

அப்போ கூட 200 பவுன் நகை கேட்டாங்க. நான் 100 தான் தர முடியும்னு சொன்னேன். அதுக்கும் சம்மதிச்சிட்டாங்க. செப்டம்பர் 26ல நலங்கு நிகழ்ச்சி சென்னையில நடந்தது.


கல்யாணம் நவம்பர்னு இன்விட்டேஷன்லாம் கொடுத்தாச்சு. நலங்க முடிஞ்சி சிங்கப்பூர் கிளம்புனாங்க. அப்போவே 100 பவுன் நகையைக் கேட்டாங்க. மேரேஜ் முடியட்டும்னு சொன்னோம். அப்போ நீங்க கொண்டு வந்தா ஏர்போர்ட்ல கஸ்டம்ஸ் செக்கப் இருக்கும்.

பிரச்சனை வரலாம். நான் பைலட். கொண்டு போனா பிரச்சனை இல்லன்னு சொன்னாரு. அதை நம்பி 50 பவுன் கொடுத்தோம். அப்புறம் ப்ரீ வெட்டிங் ஷூட்டுக்காக சிங்கப்பூர் போனேன். அப்போ தான் பல அதிர்ச்சியான தகவல்கள் கிடைச்சது.

அவங்க சொந்தக்காரங்க கிட்ட விசாரிச்சா ரொம்ப அதிர்ச்சி. அவரோட முதல் மனைவியோ அவரைத் துரத்தி விட்டுருக்காங்கன்னு தெரிஞ்சது. என்னை வீட்டுக்குள்ளேயே விடல. துணி மணி மட்டும் தந்தாங்க. நகையைப் பத்திக் கேட்டதுக்கு எப்போ தந்தன்னு கேட்டு அதிர்ச்சியைக் கொடுத்துட்டாங்க. அவர் மீது புகார் கொடுக்குறது பத்தி யோசிச்சிக்கிட்டு இருக்கேன். வக்கீல்கிட்ட பேசி அவர் வேலை செய்ற சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்சுக்கு மெயில் போட்டுருக்கேன் என்கிறார் விரக்தியோடு ஜெனிப்ரியா.

Tags:    

Similar News