வெற்றிமாறனுக்கு முதல் தோல்வி!.. மண்ணை கவ்விய விடுதலை 2!.. இவ்வளவுதான் வசூலா?..
இயக்குனர் வெற்றிமாறன்: தமிழ் சினிமாவில் இதுவரை தோல்விகளை சந்தித்திராத இயக்குனர்களில் ஒருவர் இயக்குனர் வெற்றிமாறன். பொல்லாதவன் என்ற திரைப்படத்தின் மூலமாக தனது திரைப்பயணத்தை தொடங்கிய இவர் தற்போது வரை ஏழு திரைப்படங்களை இயக்கியிருக்கின்றார். இந்த 7 திரைப்படங்களும் மிகப்பெரிய ஹிட் கொடுத்துள்ளது.
விடுதலை: கடந்த 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31ஆம் தேதி வெளியான திரைப்படம் விடுதலை. இந்த திரைப்படத்தில் நடிகர் சூரி, பவானி ஸ்ரீ, சேத்தன், விஜய் சேதுபதி உள்ளிட்ட பல நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்கள். நடிகர் சூரி இந்த திரைப்படத்தின் மூலமாக ஹீரோவாக அறிமுகமானார்.
மேலும் இசைஞானி இளையராஜா இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். இந்த திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்றிருந்தது. விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் முதல் பாகம் மிகப்பெரிய பாராட்டை பெற்றிருந்தது.
விடுதலை 2: முதல் பாகத்திற்கு கிடைத்த வெற்றியை தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாவது பாகத்தை இயக்கினார் இயக்குனர் வெற்றிமாறன். முதல் பாகத்தில் முழுக்க முழுக்க சூரிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வந்த நிலையில் இரண்டாவது பாகம் விஜய் சேதுபதியை மையமாக வைத்து எடுக்கப்பட்டது. விஜய் சேதுபதியின் கடந்த கால வாழ்க்கை அவர் எப்படி போராளியாக மாறினார் என்பதை எடுத்துக் கூறும் விதமாக இந்த திரைப்படம் அமைந்திருந்தது.
இப்படம் கடந்த டிசம்பர் 20ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ஆனால் விமர்சன ரீதியாக படம் வரவேற்பை பெற்றிருந்தாலும் வசூல் ரீதியாக தோல்வியை சந்தித்துள்ளது. முதல் பாகத்தை காட்டிலும் இரண்டாவது பாகத்தை மிக கவனமாக இயக்கினார் வெற்றிமாறன். ஆனால் விடுதலை 2 திரைப்படத்தில் தேவையற்ற அரசியல் வசனங்கள் தான் ரசிகர்களை சலிப்படைய வைத்திருக்கின்றது என்று பலரும் கூறி வருகிறார்கள்.
விடுதலை 2 செலவு: விடுதலை திரைப்படத்தின் முதல் பாகத்தை எடுத்த போதே கிட்டத்தட்ட 80 சதவீதம் இரண்டாவது பாகத்திற்கான படப்பிடிப்பு முடிந்து விட்டதாக இயக்குனர் வெற்றிமாறன் தெரிவித்திருந்தார். மீண்டும் படத்தை தரமாக எடுக்கிறேன் என்று கூறி படம் ரிலீசுக்கு முந்தைய நாள் வரை படத்தை எடுத்து வந்தார். இந்த படத்திற்கு நடிகர்களின் சம்பளம் மற்றும் படப்பிடிப்பு செலவு என 70 கோடி ரூபாய் வரை செலவாகி இருக்கின்றது.
விடுதலை 2 படத்தின் வசூல்: இந்த படத்தின் வியாபாரத்தை எடுத்துக் கொண்டால் முதல் பாகம் வெளியான போதே தொலைக்காட்சி மற்றும் இணைய ஒளிபரப்பு வியாபாரம் அனைத்தையும் சேர்த்து முடித்து விட்டார்கள். இதில் தமிழ்நாடு திரையரங்கு டிஸ்ட்ரிபியூஷன் முறையில் சுமார் 10 லிருந்து 12 கோடி ரூபாய் வரை லாபம் கிடைக்க வாய்ப்பு இருக்கின்றது.
வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாட்டு உரிமைகள் அடிப்படையில் சுமார் 16 கோடி கிடைத்திருப்பதாக கூறப்படுகின்றது. ஆகவே மொத்தம் விடுதலை 2 திரைப்படத்தின் மூலமாக 30 கோடி ரூபாய் தான் லாபம் கிடைத்திருக்கின்றது. அப்படி பார்த்தால் 40 கோடி வரை தயாரிப்பாளருக்கு இந்த திரைப்படத்தின் மூலம் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாம். இந்த திரைப்படத்தின் மூலமாக இதுவரை தோல்வியே கண்டிராத இயக்குனர் என்கின்ற பெயரை இழக்கின்றார் இயக்குனர் வெற்றிமாறன்.