ஹோட்டலை விலைக்கு கேட்டானா? இப்படியா உருட்டுவீங்க… விக்னேஷ் சிவனின் திடீர் ஸ்டேட்மெண்ட்…
விக்னேஷ் சிவனின் திடீர் இன்ஸ்டாகிராம் பதிவு வைரலாக பரவி வருகிறது.
Vignesh Shivan: நயன்தாராவின் கணவரும், இயக்குனருமான விக்னேஷ் சிவன் அரசு ஹோட்டலை விலைக்கு கேட்டதாக வதந்தி பரவிய நிலையில், தன்னுடைய விளக்கத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு இருக்கிறார்.
நானும் ரவுடித்தான் திரைப்படத்தின் மூலம் நடிகை நயன்தாராவிடம் காதலில் விழுந்தவர் விக்னேஷ் சிவன். தொடர்ச்சியாக பல வருடமாக இருவரும் காதலித்து வந்த நிலையில் சில வருடங்கள் முன்னர் நெருங்கிய வட்டாரத்தின் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர்.
கோலிவுட்டின் முதல் பிரபலமாக நயன்தாரா தன்னுடைய திருமணத்தினை நெட்பிளிக்ஸ் நிறுவனத்துக்கு விற்பனை செய்தார். அதற்கு முன்னர் ஒரு பாடல் பிரச்னையில் தனுஷுக்கு அவர் எழுதிய கடிதம் ரசிகர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் நயன்தாராவின் கணவர் விக்னேஷ் சிவன் அரசு ஹோட்டல் எதுவும் விலைக்கு கிடைக்குமா எனக் கேட்டதாகவும், அரசு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்ததாகவும் தகவல்கள் வெளியானது. தொடர்ச்சியாக அதுகுறித்து சர்ச்சைகளும் கிளம்பியது.
இந்நிலையில் இயக்குனர் விக்னேஷ் சிவன் தன்னுடைய இன்ஸ்டாகிராமில் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறுகையில், அன்பான நண்பர்களே இந்த பதிவு பாண்டிச்சேரி அரசு ஹோட்டலை நான் விலைக்கு கேட்டதாக இணையத்தில் தற்போது பரவி வரும் மொக்கை செய்தியின் விளக்கம்தான்.
என்னுடைய லவ் இன்சூரன்ஸ் கம்பெனியின் ஷூட்டிங்கிற்காக ஏர்போர்ட் அனுமதி கேட்டு தான் சென்றேன். இதை தொடர்ந்து மரியாதை நிமித்தமாக முதல்வரை சென்று நேரில் சந்தித்தேன். அப்பொழுது சுற்றுலாத்துறை அமைச்சரும் இருந்தார். அப்போது மேனேஜர் ஒருவர் அவர் விஷயத்துக்காக வந்திருந்தார்.
அது என்னுடைய விஷயத்துடன் தவறாக கனெக்ட் செய்யப்பட்டு விட்டது. உருவாக்கப்பட்ட மீம்ஸ்களும், ஜோக்குகளும் நன்றாக இருந்தது. ஆனால் தேவையே இல்லாதது எனவும் குறிப்பிட்டுள்ளார்.