மகனால் விஜய் சேதுபதிக்கு நேர்ந்த அவமானம்!.. அப்படி என்னதான் நடந்தது?....
Phoenix movie: விஜய் சேதுபதியின் மகன் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள பீனிக்ஸ் திரைப்படம் வருகிற 4ம் தேதி வெளியாகவுள்ளது. எனவே, இந்த படம் தொடர்பான புரமோஷன் நிகழ்ச்சிகளில் படக்குழு ஈடுபட்டிருக்கிறது. மகன் ஹீரோவாக அறிமுகமாகியிருக்கிறார் என்பதும் விஜய் சேதுபதியும் புரமோஷன் நிகழ்ச்சிகளில் ஈடுபட்டு வருகிறார்.
இந்த படத்தின் டீசர் மற்றும் டிரெய்லர் வீடியோக்கள் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. ஒருபக்கம் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா ட்ரோலிலும் தொடர்ந்து சிக்கி வருகிறார். ஏற்கனவே அப்பா விஜய் சேதுபதியின் சிந்துபாத் படத்தில் இவர் சிறுவனாக நடித்திருந்தார். அப்போது மேடையில் பேசிய சூர்யா ‘என் அப்பா தினமும் 500 ரூபாய் மட்டுமே செலவுக்கு கொடுக்கிறார்’ என சொன்னதை பலரும் ட்ரோல் செய்தார்கள்.
அதேபோல், ‘நான் அப்பா மாதிரி இல்லை. நான் வேற’ என இவர் சொன்னதும் ட்ரோலில் சிக்கியது. மேலும், பீனிக்ஸ் புரமோஷன் விழாக்களில் பபிள்கம் மென்றுகொண்டு அவர் பந்தா காட்டியதாக பலரும் ட்ரோல் செய்தார்கள். சூர்யா தனது புகைப்படங்களையும், வீடியோக்களையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார்.
எனவே, சூர்யாவை ட்ரோல் செய்பவர்கள் மற்றும் அதை செய்தியாக்க நினைப்பவர்கள் எல்லோருமே அவரின் இன்ஸ்டாகிராமிலிருந்து எடுத்து பயன்படுத்தி வந்தனர். இதைத்தொடர்ந்து அப்படி சூர்யாவின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுத்து பயன்படுத்தினால் காப்பி ரைட்ஸ் கேட்டு வழக்கு தொடர்வோம் என பல யுடியூப் சேனல்களை சிலர் மிரட்டியதாக புகார் எழுந்தது.
இந்நிலையில், நேற்று விஜய் சேதுபதியிடம் இதுபற்றி செய்தியாளர்கள் கேள்வி கேட்டனர். அதற்கு அவர் ‘தெரியாமல் நடந்திருக்கும். எங்கள் தரப்பில் இருந்து உங்களுக்கு அப்படி ஒரு மிரட்டல் வந்திருந்தால் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்’ என கூறினார். மகனுக்காக மன்னிப்பு கேட்ட விஜய் சேதுபதி என பலரும் இதை செய்தியாக்கி வருகிறார்கள்.