விஜய் தேவரகொண்டா, அல்லு அர்ஜுன் ரஜினியை பார்த்து கத்துக்கணும்... பொளந்த பிரபலம்
Rajinikanth : தமிழ் சினிமாவின் உச்சபட்ச நடிகர்களில் ஒருவர் ரஜினிகாந்த். தமிழ் சினிமா மட்டுமல்லாது இந்திய சினிமாவின் அடையாளங்களில் ஒருவர். அந்த காலகட்டத்தில் ஹீரோ என்றால் நல்ல சிவப்பாக இருக்க வேண்டும். நல்ல உயரம் தெளிவான தமிழ் உச்சரிப்பு இவை அனைத்தும் ஒரு ஹீரோவிற்கான அடையாளமாக இருந்தது. ஆனால் இதற்கு அப்படி எதிர்மறையாக கருப்பு நிறம் கன்னடம் கலந்த தமிழ் உச்சரிப்பு அதுவும் கடகடவென டயலாக் பேசுவது என ரஜினி ஒரு ஹீரோவிற்கான ஃபார்முலாவை முற்றிலுமாக உடைத்து தமிழ் மக்களின் நாயகனாக திரையில் அடித்து தூள் கிளப்பினார்.
மக்களும் நம்மில் இருந்து ஒருவன் திரையில் கலக்குகிறான்டா என கொண்டாட ஆரம்பித்தார்கள். இதனால் எண்பதுகளின் காலகட்டத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக உயர்ந்து சூப்பர் ஸ்டார் அந்தஸ்தை பெற்றார். சமகாலங்களில் கமல்ஹாசன் ஒரு ஹீரோவுக்கான அனைத்து அம்சங்களையும் கொண்டிருந்தாலும் மக்கள் ரஜினி திரையில் செய்யும் ஸ்டைலுக்கும் பஞ்ச் வசனத்திற்கும் இவரை தலையில் வைத்து கொண்டாட ஆரம்பித்தார்கள்.
இதனால் ரசிகர்களின் பல்சை பக்காவாக பிடித்த ரஜினி அதிலிருந்து தனக்கென ஒரு பார்முலாவை உருவாக்கி தமிழ் மக்களை தன் வசம் கட்டிப்போட்டார். ரஜினியைப் பற்றி பல விமர்சனங்கள் வந்தாலும் படப்பிடிப்பு தளத்திலிருந்து அவரைப் பற்றி தயாரிப்பாளரோ இயக்குனரோ இதுவரை எந்தவித புகார்களையும் அளித்ததில்லை. இதுவே அவரின் வெற்றிக்கு மூலக்காரணம். தமிழ் சினிமாவில் இன்னும் ஒரு நடிகர் 75 வயது வரை ஹீரோவாக நடித்து கொண்டிருக்கும் பொழுது பின்பற்றக்கூடிய முக்கியமான நல்ல பழக்கங்களில் ஒன்று அவர் படப்பிடிப்புக்கு நேரம் தவறாமல் வருவதுதான். சொன்ன நேரத்திற்கு வருவது ரஜினியின் வழக்கம்.
அது மட்டுமல்லாமல் ரஜினி தயாரிப்பாளர்களுக்கு தெய்வம் என பிரபல தயாரிப்பாளரும் சினிமா விமர்சகருமான டி.தனஞ்ஜெயன் கூறியுள்ளார் மேலும் அவர் கூறியதாவது,” படப்பிடிப்பிற்கு வெளிமாநிலம் அல்லது வெளிநாடுகள் சென்றாலும் ரஜினி விமானத்தில் எக்கனாமிக் கிளாஸ் புக் செய்தால் போதும் என்று கூறி விடுவார், ஆனால் விஜய் தேவரகொண்டா, அல்லு அர்ஜுன் போன்ற ஹீரோக்கள் தற்போது பிரைவேட் ஜெட் கேட்டு தயாரிப்பாளர்களுக்கு கஷ்டத்தை கொடுக்கின்றனர். நூறு கோடிக்கு மேல் சம்பளம் வாங்கியும் முதலீடு செய்யும் முதலாளிகளை சந்தோஷப்படுத்தி அழகு பார்ப்பவர் ரஜினி” என்று பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
கூலி பட இசை வெளியீட்டு விழாவில் தயாரிப்பாளர் கலாநிதி மாறன் கூறுகையில் இன்று இரண்டு படம் வெற்றி அடைந்தால் போதும் சில ஹீரோக்கள் எனக்கு பிரைவேட் ஜெட் வேண்டுமென்று கேட்கிறார்கள் என்று சொல்லியிருந்தார்.
அதை விமர்சிக்கும் வகையில் தயாரிப்பாளர் டி.தனஞ்ஜெயன், இன்றைய சினிமா உலகில் இப்படி இருக்கும் ஹீரோக்களுக்கு மத்தியில் தயாரிப்பாளர்களுக்கு பெரிதும் சிரமம் வழங்காத ரஜினி என்றுமே எங்களுக்கு தெய்வம் தான் என்று கூறியுள்ளார்.