வானத்தைப் போல படத்திற்கு தேசிய விருது ஏன் கிடைக்கல? இப்பத்தானே தெரியுது...!

By :  Sankaran
Update: 2024-12-19 02:27 GMT

நடிகர் விஜயகாந்த் பற்றியும், அவரது திறமை குறித்தும் இயக்குனர் விக்ரமன் தனது கருத்துகளைப் பகிர்ந்துள்ளார். வாங்க என்னன்னு பார்ப்போம்.

விஜயகாந்த் சாரைப் பார்க்கும்போதெல்லாம் கண் கலங்குது. இந்த நல்ல மனுசர் நம்ம கூட இல்லையேங்கற வருத்தம் நிறைய இருக்கு. நான் இதுவரைக்கும் பண்ணின படங்களிலேயே ஒரு ஹீரோவுக்காக யோசிச்சி கதை பண்ணினேன்னா அது மரியாதை படம்தான்.

அவரு வந்து பயங்கர புத்திசாலி. கடைசி படம் டைரக்ட் பண்ணினாரு. விஜயகாந்த் சாருக்கு எப்படி டைரக்ஷன் தெரியும்? வேற யாரோ டைரக்ட் பண்ணிருப்பாங்க. அவரு சும்மா பேரு போட்டுருக்காருன்னு சொன்னாங்க. நிச்சயமா அப்படி இல்ல. உண்மையிலேயே அவருக்கு டைரக்ஷன் நல்லா தெரியும்.

திரைத்துறையில் தயாரிப்பாளர்கள் பல பேரை வாழ வச்சிருக்காரு. பல புது டைரக்டர்களை அறிமுகப்படுத்திருக்காரு. இன்ஸ்டிட்யூட்ல அவரு வந்த பிறகு தான் பல பேரை டைரக்டர் ஆக்கியிருக்காரு. ஆர்.கே.செல்வமணி, அரவிந்த், ஆபாவணன்னு சொல்லிக்கிட்டே போகலாம்.

அவருக்கு இன்னம் நாம அஞ்சலியே பண்ணலன்னு தான் சொல்லணும். இப்ப திரும்ப ஸ்க்ரீன்ல ஏஐ மூலமா பார்க்கறது அரைகுறையாகத் தான் இருக்குதுன்னு நான் நினைக்கிறேன். முழுமையா இல்ல என்கிறார் இயக்குனர் விக்ரமன்.

டிசம்பர் 28ல அவருடைய நினைவு நாள் வருது. அவரைப் பற்றிய உங்க அபிப்ராயம் என்னன்னு கேட்கும்போது விக்ரமன் இப்படி சொல்கிறார். அவர் ஒரு எளிமையான மனிதர். நல்ல நடிகர். அவரோட திறமையில ஒரு சின்ன பகுதியை மட்டும்தான் நான் வெளிப்படுத்திருக்கேன். அதைத்தாண்டி 100 சதவீதம் திறமையுள்ள நடிகர் அவர்.

tribute vijayakanth

நான் வானத்தைப் போல படத்துக்கே அவருக்கு தேசிய விருது கிடைக்கும்னு நினைச்சேன். அது சில அரசியல் காரணங்களுக்காக கிடைக்கல. அவரை நான் அசிஸ்டண்ட் டைரக்டரா இருக்கும்போதே தெரியும். நூறாவது நாள்ல ஒர்க் பண்ணிருக்கேன். அதுல அவரு நடிச்சிருக்காரு. அதுல பெரிய கனெக்ஷன் கிடையாது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

2009ல் விக்ரமன் விஜயகாந்தை வைத்து இயக்கிய படம் மரியாதை. இந்தப் படத்திற்கு இசை அமைத்தவர் விஜய் ஆண்டனி. விஜயகாந்துடன் இணைந்து மீரா ஜாஸ்மின், மீனா, சம்பத்ராஜ், அம்பிகா, ரமேஷ் கண்ணா உள்பட பலர் நடித்துள்ளனர்.

2000ல் விக்ரமன் இயக்கிய படம் வானத்தைப் போல. எஸ்.ஏ.ராஜ்குமார் இசை அமைத்துள்ளார். இந்தப் படத்தில் அனைத்துப் பாடல்களும் வெகு அருமை. விஜயகாந்துடன் இணைந்து மீனா, பிரபுதேவா, லிவிங்ஸ்டன், கௌசல்யா, அஞ்சு அரவிந்த் உள்பட பலர் நடித்துள்ளனர். அண்ணன் - தம்பி இடையே உள்ள பாசத்தை மையப்படுத்தி இப்படத்தை விக்ரம் இயக்கி இருந்தார். பல செண்டிமெண்ட் காட்சிகள் இப்படத்தில் இடம் பெற்றிருந்தது.

இந்தப் படத்தில் விஜயகாந்த் மாறுபட்ட இரு வேடங்களில் நடித்து அசத்தி இருப்பார். அவரின் நடிப்பை கலைஞர் கருணாநிதியே பாராட்டியும் இருந்தார். ஆனால், சில அரசியில் காரணங்கால் தேசிய விருது கொடுக்கப்படவில்லை என விக்ரம் பேசி இருக்கிறார்.

Tags:    

Similar News