வடிவேலு இல்லாததால ஆட்டம் போடும் யோகிபாபு... ரெண்டு பேருக்கும் மைனஸ் என்ன தெரியுமா?

By :  Sankaran
Update: 2024-12-13 08:14 GMT

நகைச்சுவை ஜாம்பவான் வடிவேலு பற்றியும், காமெடி நடிகர் யோகிபாபு பற்றியும் பிரபல நடிகர் டெலிபோன் ராஜ் இவ்வாறு தனது கருத்துகளைப் பகிர்ந்துள்ளார்.

யோகிபாபுக்கு நல்ல நேரம்

யோகிபாபுவோட பிளஸ் என்னன்னா எல்லா காமெடியன் ஆக்டரையும் ஓரம் கட்டிட்டாரு. இவரு ஓரம் கட்டல. இவரோட நல்ல நேரம் வடிவேலு சார் இருந்தாரு. அவரு கொஞ்சம் கம்மி பண்ணிட்டாரு. சந்தானம் போயிட்டாரு. சூரி போயிட்டாரு. விவேக் சார் இறந்தே போயிட்டாரு. அப்படின்னு நிறைய பேரு காணாமப் போயிட்டாங்க. அது அவருக்கு ஒரு பெரிய பிளஸ்.

எனக்கும் நண்பர்தான். அவரும் நானும் நிறைய படங்கள் பண்ணிருக்கோம். இவரோட மேக்கப் மேன்ல இருந்து டிரைவர் வரைக்கும் இவருக்கிட்ட ஒர்க் பண்றவங்களுக்கு சம்பளம் சரியா கொடுக்க மாட்டாராம். இதுதான் மைனஸ்.

நடிகர்களுக்கு வாய்ப்பு

கஷ்டப்பட்டு தான் நடிக்கிறீங்க. நீங்க நினைச்சா டைரக்டர், புரொடியூசர உருவாக்கலாம். நிறைய பேரு சாலிகிராமத்துல அதுவும் நீங்க நடந்த காவேரி டீக்கடையில அங்க இங்க சுத்திக்கிட்டு பிச்சை எடுக்குற லெவலுக்கு இருக்குற நடிகர்களுக்கு வாய்ப்பு வாங்கிக் கொடுக்கலாம். போட்டியாவா வந்துடப்போறாங்க. அது அவரோட மைனஸ்.

ஸ்க்ரீன்பிளே மன்னன்

வடிவேலு நடிப்பு அரக்கன். ஸ்க்ரீன்பிளே மன்னன். என்னவேணாலும் சொல்லலாம். என்னோட குரு எல்லாமே அவர்தான். அவரு இல்லன்னா இன்னிக்கு நான் இந்த சானல்ல இல்ல.

பகத்பாசில் முழிக்கிறாரு...


இன்னைக்கும் சூட்டிங் போயிருக்கேன். பகத்பாசில் நிக்கிறாங்க. வடிவேலு சார் இருக்காரு. ஆனா வடிவேலு சாருக்குத்தான் ரசிகர்கள் அதிகம். பகத்பாசில் சார் இப்படியே முழிக்கிறாரு. வடிவேலு சாரைப் பார்த்துட்டு பொக்கைக் கிழவிங்க, சின்னக்குழந்தைங்க அவ்ளோ பேரும் என்ஜாய்.

வடிவேலு மைனஸ்

அப்படி ஒரு காமெடி ஜாம்பவான். இவரு நிறைய பேரை காமெடியன்களா உருவாக்குனாரு. அவங்களை நல்லா வளர்த்து விட்டு சம்பாதிக்க வச்சாரு. ஆனா இப்போ அவனுக தான் திட்டிக்கிட்டு இருக்கானுங்க. இப்படி வளர்த்து விட்டுருக்கக்கூடாது. அது அவருக்கிட்ட இருக்குற பெரிய மைனஸ். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

சூரியும், சந்தானமும் ஹீரோவாக ஆகி விட்டதால் காமெடியனுக்குப் பஞ்சம் ஏற்பட்டுவிட்டது. அதனால் தான் யோகிபாபு பீக்ல இருக்காரு என்பதைத் தான் அவர் இப்படி குறிப்பிட்டுள்ளார் என்றே தெரிகிறது.

Tags:    

Similar News