அவர் தமிழ்நாட்டுக்காரரே இல்ல.. அப்புறம் ஏன் அவர் வரனும்! அஜித்தின் செயலை நியாயப்படுத்தும் பிரபலம்

Actor Ajith: தமிழ் சினிமாவில் ஒரு முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் அஜித். நடிகர், கார் ரேஸர், பைக் ரேஸர், ரைஃபில் சுடுதல் என மற்ற திறமைகளையும் உள்ளடக்கிய ஒரு அற்புதமான மனிதர் அஜித். அஜித் தற்போது விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். சமீபத்தில்தான் தன் மகன் ஆத்விக்கின் பிறந்த நாளை நண்பர்கள் முன்னிலையில் எளிமையாக கொண்டாடினார் அஜித். அப்போது எடுத்த சில புகைப்படங்களை ஷாலினி தனது இணையதள பக்கத்தில் பகிர்ந்தார். […]

;

By :  Rohini
Published On 2024-03-06 01:30 IST   |   Updated On 2024-03-06 01:30:00 IST

ajith

Actor Ajith: தமிழ் சினிமாவில் ஒரு முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் அஜித். நடிகர், கார் ரேஸர், பைக் ரேஸர், ரைஃபில் சுடுதல் என மற்ற திறமைகளையும் உள்ளடக்கிய ஒரு அற்புதமான மனிதர் அஜித். அஜித் தற்போது விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். சமீபத்தில்தான் தன் மகன் ஆத்விக்கின் பிறந்த நாளை நண்பர்கள் முன்னிலையில் எளிமையாக கொண்டாடினார் அஜித்.

அப்போது எடுத்த சில புகைப்படங்களை ஷாலினி தனது இணையதள பக்கத்தில் பகிர்ந்தார். இந்த நிலையில் சமீபகாலமாக அஜித்தின் செயல்பாடுகள் குறித்து பல்வேறு விமர்சனங்கள் ஊடகங்களில் வந்த வண்ணம் இருக்கின்றன. இது விஜயகாந்த் மறைவில் இருந்தே தொடங்கியது. விஜயகாந்த் மறைவிற்கு வராததது. அந்த நேரத்தில் வெளி நாடுகளில் படப்பிடிப்பில் இருந்தார் சரி.

இதையும் படிங்க:நீங்க இங்க இருந்தா ஷூட்டிங்கே நடக்காது… தயாரிப்பாளரை துரத்திவிட்ட ரஜினி பட இயக்குனர்!…

இப்பொழுது சில நாள்களாக சென்னையில்தான் இருக்கிறார். அவர் சமாதிக்கு கூட சென்று அஞ்சலி செலுத்தவில்லை அஜித். இது சம்பந்தமான விமர்சனங்கள் தொடர்ந்து அவர் முன்வைக்கப்படுகின்றன. மேலும் கலைஞரின் நூற்றாண்டு விழாவிற்கும் அஜித் வரவில்லை. அழைப்பிதழ் கொடுத்தும் அதற்கும் வரவில்லை. ரசிகர்களை சந்திக்கவும் விரும்பவில்லை . இது சரிதானா என பிரபல திரைவிமர்சகர் காந்தராஜிடம் கேட்ட போது,

அவருக்கென ஒரு பாலிஸி உருவாக்கி வைத்திருக்கிறார் அஜித். எங்கு போக வேண்டும். யாருக்காக போக வேண்டும் என்பது அவர் விருப்பம். கலைஞர் நூற்றாண்டு விழாவிற்கு போக வேண்டும் என சொன்னால் ஏன் அவர் வரவேண்டும். முதலில் அஜித் தமிழ்நாட்டுக்காரரே இல்லை. கலைஞருக்கு உறவினரா? இல்லை கலைஞர் வசனத்தில்தான் நடித்தாரா? எதுவும் தொடர்பு இல்லாத போது ஏன் அவர் வர வேண்டும் என நினைக்கிறீர்கள்?

இதையும் படிங்க: அம்பானி ஸ்டைலில் ஜெயம் ரவிக்கு கிடைச்ச கிஃப்ட்! ஓடாத படத்துக்கே இப்படினா? மாஸ் பண்ணும் மாமியார்

இப்படி இந்த மாதிரி விழாக்கள், நிகழ்ச்சிகளுக்கு வந்தால்தான் என்னை ஏற்றுக் கொள்வீர்கள் என்றால் எதுவுமே வேண்டாம் என தூக்கிப் போட்டு போகக் கூடிய மனிதர் அஜித். பப்ளிசிட்டி விரும்பாதவர். தமிழ் படங்களில் நடித்திருக்கிறாரே தவிர அவரது தாய்மொழி தமிழ் இல்லை. நடிப்பது அவர் தொழில். அது முடிந்ததும் அவர் வேலையை பார்க்க போய்விடுவார். சொல்லப்போனால் நடிப்பை தாண்டி அவருக்கு மோட்டார் சம்பந்தமான தொழிலில்தான் அதிக ஈடுபாடு இருக்கிறது. அதனால் அவர் அவராக இருக்க விரும்புகிறார்.
என காந்தராஜ் கூறினார்.

Tags:    

Similar News