சுகர் பேபின்னு கலாய்க்கும் நெட்டிசன்கள்!.. த்ரிஷா என்ன கொண்டு வந்துருக்காரு பார்த்தீங்களா?
நடிகை த்ரிஷா தற்போது பட்டாம்பூச்சி டிசைன் கொண்ட உடை அணிந்து ரசிகர்களின் மனதை கவர்ந்துள்ளார்.;
நடிகை த்ரிஷா தான் நடித்துள்ள தக் லைஃப் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் பிஸியாக இருந்து வரும் நிலையில் அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது புகைப்படங்களை பகிர்ந்துக்கொள்வது வழக்கம். மேலும், அவர் தற்போது பட்டாம்பூச்சிகளை டிசைனாக கொண்ட உடை அணிந்து ஒரு பட்டாம்பூச்சிப் போலிருக்கும் அழகான போட்டோக்களை ஷேர் செய்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
த்ரிஷா மாடலாக "மிஸ் சென்னை" பட்டம் வென்றவர். அதையடுத்து ஜோடி படத்தில் சிம்ரனின் தோழியாக அறிமுகமான இவர் 2002-ல் "மௌனம் பேசியதே" படத்தில் கதாநாயகியாக நடிக்க தொடங்கினார். மேலும், சாமி, கில்லி, விண்ணைத்தாண்டி வருவாயா, 96 உள்ளிட்ட பல படங்கள் இவருக்கு பெரும் புகழை பெற்றுத்தந்தது.
நடிகை த்ரிஷா தொடர்ந்து தனது நடிப்பு மற்றும் இளமை தோற்றத்தால் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். தனது 40 வயதிலும் முன்னணி நடிகையாக திகழும் இவர் தென்னிந்திய சினிமாவில் "சவுத் குயின்" என்று அழைக்கப்படுகிறார். இந்த வருடம் மட்டும் கைவசம் ஏகப்பட்ட படங்களில் நடித்து வருகிறார்.
நடிகை த்ரிஷா நடிப்பில் இதுவரை வெளியான விடாமுயற்சி, குட் பேட் அக்லி உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்கள் இடையே பாராட்டுக்களை பெற்றுவந்த நிலையில் தற்போது இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் தயாரித்தும் நடித்தும் வெளியாக உள்ள தக் லைஃப் படத்தில் ஒரு முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்தில் சிம்பு, அஷோக் செல்வன், அபிராமி, ஐஸ்வர்யா லட்சுமி, நாசர் போன்ற பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர்.
த்ரிஷா சமீபத்தில் தனது செல்லப்பிராணியுடன் ஸ்குவாட்ஸ் உடற்பயிற்சி செய்யும் வீடியோ, தனது பிறந்தநாள் கொண்டாட்டத்தின் வீடியோ உள்ளிட்ட பல தருணங்களை ஷேர் செய்திருந்த நிலையில் தற்போது பட்டாம்பூச்சி டிசைன் கொண்ட உடை அணிந்து ரசிகர்களின் மனதை கவர்ந்துள்ளார்.