முதலில் இந்த வேலைய பாருங்க... யுவன் ஷங்கர் ராஜாவுக்கு கடிவாளம் போட்ட சூப்பர் ஹிட் இயக்குனர்...
தமிழ் சினிமா முன்னணி இசையமைப்பாளரான யுவன் சங்கர் ராஜா தற்பொழுது "காபி வித் காதல்" என்னும் படத்திற்கு இசையமைத்து வருகிறார். இந்த படத்தை இயக்குனர் சுந்தர் சி இயக்குகிறார். படத்தில் ஜீவா, ஸ்ரீகாந்த், ஜெய், டிடி என பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். இதற்கு முன்பு சுந்தர் சி - யுவன் கூட்டணியில் வின்னர் படம் வெளியானது. அந்த திரைப்படத்தில் இடம்பெற்றிருந்த பாடல்கள் மற்றும் பின்னணி இசை அந்த காலத்திலேயே ரசிகர்களைவெகுவாக ஈர்த்து. இதனால் இந்த […]
தமிழ் சினிமா முன்னணி இசையமைப்பாளரான யுவன் சங்கர் ராஜா தற்பொழுது "காபி வித் காதல்" என்னும் படத்திற்கு இசையமைத்து வருகிறார். இந்த படத்தை இயக்குனர் சுந்தர் சி இயக்குகிறார். படத்தில் ஜீவா, ஸ்ரீகாந்த், ஜெய், டிடி என பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.
இதற்கு முன்பு சுந்தர் சி - யுவன் கூட்டணியில் வின்னர் படம் வெளியானது. அந்த திரைப்படத்தில் இடம்பெற்றிருந்த பாடல்கள் மற்றும் பின்னணி இசை அந்த காலத்திலேயே ரசிகர்களைவெகுவாக ஈர்த்து. இதனால் இந்த திரைப்படத்தின் மீதும் மிகப்பெரிய எதிர்பார்ப்புகள் உள்ளது.
ஏற்கனவே காபி வித் காதல் படத்திலிருந்து வெளியான முதல் பாடலான ரம் பம் பம் பாடல் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்ப்பை பெற்று வருகிறது. இந்த நிலையில் படத்தின் ரிலீஸ் தேதி நெருங்கியுள்ள நிலையில், படத்திற்கான போஸ்ட் ப்ரொடக்சன் பணியில் படக்குழு தீவிரமாக களமிறங்கியுள்ளது.
இதையும் படியுங்களேன்- லெஜண்டுக்கு பக்கா பிளான்!… அப்படியே ஆண்டவரை காப்பி அடிக்கும் நம்ம அண்ணாச்சி….
இந்த நிலையில், வரும் ஜூலை 16-ஆம் தேதி மலேசியாவில் நடைபெறவுள்ள இசைகச்சேரியில் கலந்து கொள்ள யுவன் மலேசியா செல்கிறார். ஆனால், காபி வித் காதல் படத்தின் ரிலீஸ் தேதி நெருங்கியுள்ள நிலையில், சுந்தர் சி படத்தின் பின்னணி இசையை முடித்துக்கொடுத்துவிட்டு செல்லுங்கள் என யுவனுக்கு கடிவாளம் போட்டுவிட்டாராம்.
யுவனும் படத்தின் பின்னணி இசை அமைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு முழுவதுமாக சுந்தர் சிக்கு திருப்தி கொடுக்கும் வகையில் பிண்ணனி இசையை முடித்துக்கொடுத்து விட்டு நேற்று மலேசியாவிற்கு சென்றுவிட்டாராம்.