என்னது தேங்காய்சீனிவாசனுக்கு வந்த பட வாய்ப்புகளை சிவாஜி கெடுத்தாரா? இது லிஸ்ட்லயே இல்லையே!
சினிமாத்துறையில் எப்பவுமே சக நடிகர்களுடன் முரண்பாடு வந்தவண்ணம் உள்ளது. ஆரம்பத்தில் எம்ஜிஆர், எம்ஆர்.ராதா முரண்பாடு வந்தது. எம்ஜிஆர், கண்ணதாசன் முரண்பாடு வந்தது. சக நடிகர்கள், கவிஞர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் கூட எல்லாம் முரண்பாடு வந்தது. அந்த வகையில் சிவாஜி, தேங்காய் சீனிவாசன் இடையே அப்படி என்ன முரண்பாடு என்று ஆங்கர் கேட்ட கேள்விக்கு பிரபல சினிமா விமர்சகர் டாக்டர் காந்தாராஜ் இப்படி பதில் சொல்கிறார்.
தேங்காய் சீனிவாசனுக்கு வந்த பல படவாய்ப்புகளை சிவாஜி கெடுத்ததா சொன்னாங்க. தேங்காய்சீனிவாசன் எங்களுக்கு தூரத்து உறவு. எங்க அண்ணன்கிட்ட வந்து 'சிவாஜி இப்படி பண்றாரு. கொஞ்சம் பாரேன்'னு சொன்னாரு. சிவாஜி அய்யாவும் எங்களுக்கு உறவினர் மாதிரி கூட வச்சிக்கலாம். எங்க மூத்த அண்ணன் ஜெயசீலன். அவருக்கிட்ட சொல்லி 'என்னப்பா தேங்காய்சீனிவாசனை இப்படி பண்றாரு'ன்னு சொன்ன உடனே அப்புறம் சரியாச்சு என்கிறார்.
தேங்காய் சீனிவாசன் ஒரு கட்டத்தில் காமெடியில் இருந்து குணச்சித்திர நடிகராக மாறுகிறார். அப்போ 'காரோட்டிக் கண்ணன்' மாதிரியான படங்கள் வர ஆரம்பித்தன. இதுகுறித்து அப்போ பத்திரிகையில் என்ன எழுதுனாங்கன்னா 'இந்தப் பாத்திரத்தை சிவாஜியை விட தேங்காய்சீனிவாசன் நல்லா நடிக்கிறாரு'ன்னு எழுதிட்டாங்க.
அந்தப் பகையை அதிகப்படுத்த சில அச்சு ஊடகங்கள் எல்லாம் இப்படி எழுதினாங்க. சிவாஜியோ ஆனா சிவாஜியே பெரிய நடிகரா ஆகிட்டாரே. அவரை எதுக்கு செகண்ட் ஹீரோவா போடணும்னு தான் ரசிகர்கள் பேசிக்கிட்டாங்க என்கிறார் டாக்டர் காந்தாராஜ்.
குலமா குணமா படத்துல சிவாஜி ஹீரோ. ஜெய்சங்கர் செகண்ட் ஹீரோ. ஆனா மஞ்சுளா ஜெய்சங்கருக்குத் தான் ஜோடி. சூட்டிங் நடந்துக்கிட்டு இருக்கு. எம்ஜிஆர் அந்த வழியா அந்தப் பொண்ணைப் பார்த்த மாதிரி போறாரு. அப்போ டைரக்டர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் சொல்றாரு. 'இனி நீ அந்தப் படத்துல நடிக்க மாட்டே'ன்னு சொல்றாரு.
'அது ஏன்?'னு கேட்குறாங்க மஞ்சுளா. அதுக்கு 'அவரு நீயே பாரு. உனக்குத் தெரியும்'னு சொல்லிடறாரு. மறுநாள் அந்தப் பொண்ணு நடிக்க வரல. எம்ஜிஆரோட ரிக்ஷாக்காரன் படத்துல நடிக்கப் போயிடுச்சு. குலமா குணமாவுல மஞ்சுளாவுக்குப் பதில் வாணிஸ்ரீயைப் போட்டாங்க. அதெல்லாம் சிவாஜி கிட்ட வந்துட்டு அவங்ககிட்ட போனதுதான் காரணம் என்கிறார் டாக்டர் காந்தாராஜ்.
தேங்காய் சீனிவாசன் கலியுகக் கண்ணன் என்ற படத்தில் அருமையான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். இவர் எந்தக் கதாபாத்திரம் கொடுத்தாலும் அதைத் திறம்பட நடிக்கக்கூடியவர். சிவாஜியோ அவரை விட மிகப்பெரிய நடிகர். அந்தக் காலத்தில் இப்படி எல்லாம் நடந்துருக்குமா என்று கூட கேள்வி எழத்தான் செய்கிறது. அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பான்னு சொல்வாங்களே... அது மாதிரி சினிமாவுலயும் இதெல்லாம் சாதாரணமப்பா என்று எடுத்துக் கொள்ள வேண்டியதுதான்..!