ஒரு சீனில் தலை காட்டிய வாய்ப்பு!. இப்போது கோடிகளில் சம்பளம்!. யார் யார்னு பார்ப்போம் வாங்க!...
Tamil actors: சினிமாவில் ஒரு சீனில் தலை காட்டிய நடிகர், நடிகைகள் பின்னாளில் முன்னணி நடிகர் மற்றும் நடிகைகளாக மாறி பல கோடிகள் சம்பளம் வாங்குவார்கள். அப்படி யார் யார் என பார்ப்போம் வாங்க!..
விஜய் சேதுபதி: சினிமாவில் நடிக்கும் ஆசையில் சென்னை வந்து ஒரு ஃபாஸ்ட் ஃபுட் உணவகத்தில் வேலை செய்தவர். நண்பர்களின் உதவியுடன் குறும்படங்களில் நடித்து வந்தார். புதுப்பேட்டை உள்ளிட்ட நிறைய படங்களில் ஒரு காட்சிகளில்லாம் நடித்திருக்கிறார். பின்னாளில் பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் போன்ற படங்கள் மூலம் பிரபலமானார். இப்போது தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக மாறியிருக்கிறார்.
திரிஷா : மிஸ் மெட்ராஸ் அழகிப் பட்டம் வென்றவர் இவர். சிம்ரன் நடித்த ஜோடி உள்ளிட்ட சில படங்களில் கதாநாயகியின் தோழிகளில் ஒருவராக நின்று கொண்டிருப்பார். லேசா லேசா படம் மூலம் கதாநாயகியாக நடிக்க துவங்கினர். 23 வருடங்களாக சினிமாவில் நடித்து வரும் இவர் இப்போதும் முன்னணி நடிகையாக இருக்கிறார்.
சாய் பல்லவி: விஜய், ரஜினி, அஜித் படமென்றாலும் நல்ல வேடம் என்றால் மட்டுமே நடிப்பேன் என சொல்லும் இவர் ஒரு காலத்தில் கும்பலில் நிற்கும் ஒருவராக நடித்திருக்கிறார். மறைந்த இயக்குனர் மற்றும் ஒளிப்பதிவாளர் ஜீவா இயக்கிய தாம் தூம் படத்தில் கதாநாயகி கங்கனா ரனாவத்துக்கு பின்னால் ஒரு காட்சியில் நின்று கொண்டிருப்பார். இப்போது அமரன் படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி கைத்தட்டல் வாங்கியிருக்கிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம் என கலக்கி வருகிறார்.
சித்தார்த்: டிகிரி முடித்துவிட்டு மணிரத்னத்திடம் உதவியாளராக சேர்ந்தார். இயக்குனர் ஆக வேண்டும் என்பதே இவரின் நோக்கம். கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் வேலை செய்தபோது பேருந்தில் மாதவனுக்கு பின்னால் நின்று கொண்டிருப்பார். ஷங்கர் தான் இயக்கிய பாய்ஸ் படத்தில் இவரை நடிகராக மாற்றினார். இப்போது முக்கியமான நடிகராக உயர்ந்திருக்கிறார்.
கார்த்தி: சிவக்குமாரின் மகன் கார்த்தி. வெளிநாட்டில் டிகிரி படித்தவர். நடிகராக வேண்டும் என்கிற ஆசையில்தான் சென்னை வந்தார். ஆனால், அவரின் அப்பா ‘நீ முதலில் சினிமாவை கற்றுக்கொள்’ என சொல்லி மணிரத்னத்திடம் சேர்த்துவிட்டார். ஆயுத எழுத்து படத்தில் சித்தார்த் நடிக்கும் ஒரு காட்சியில் அவரின் அருகே உட்கார்ந்து கொண்டிருப்பார். சித்தார்த்தும், கார்த்தியும் வாடா போடா நண்பர்கள்.
சந்தானம்: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற லொள்ளு சபா நிகழ்ச்சி மூலம் ரசிகர்களிடம் பிரபலமானார் சந்தானம். டி.ராஜேந்தர் இயக்கிய காதல் அழிவதில்லை படத்தில் கும்பலில் ஒருவராக நின்று கொண்டிருப்பார். அதன்பின் பல வருடங்கள் கழித்து மன்மதன் படத்தில் சிம்பு இவரை காமெடி நடிகராக அறிமுகம் செய்து வைத்தார். இந்த 6 பேருமே இப்போது பல கோடிகள் சம்பளம் வாங்கும் அளவுக்கு உயர்ந்திருக்கிறார்கள்.