திமிராகப் பேசிய சரிதா... தயாரிப்பாளர் வைத்த செக்... ஆடிப்போன நடிகை..!

By :  Sankaran
Update: 2024-12-21 14:00 GMT

நடிகைகளுக்கு ஆஸ்கர் மூவீஸ் இயக்குனரும், தயாரிப்பாளருமான எம்.பாஸ்கரின் மகனும் தயாரிப்பாளருமான பாலாஜி பிரபு நடிகைகள் குறித்து சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.

சரிதா ரொம்ப பாப்புலரான காலகட்டம். அதனால தண்டிக்கப்பட்ட நியாயங்கள் படத்துல அப்பா அதுல வர்ற ஒரு கேரக்டருக்கு சரிதா தான்னு முடிவு பண்ணிட்டாரு. அப்பவே 1 லட்சம் சம்பளம் கேட்குறாங்க. அப்பாவும் ஓகேன்னு கொடுக்குறாங்க. 25 ஆயிரம் அட்வான்ஸ் கொடுத்துடறாங்க.

அக்ரீமெண்ட்ல அவருக்கிட்ட கையெழுத்தும் வாங்கியாச்சு. மைசூர் பக்கத்துல சூட்டிங். அதுக்கான வேலைகள் நடந்துக்கிட்டு இருக்கு. திடீர்னு ஒரு நாளுக்கு முன்னால சரிதா சூட்டிங்குக்கு என்னால வரமுடியாது. நான் பாலசந்தரோட அக்னி சாட்சி படத்துல கொஞ்சம் பிசியா இருக்கேன்.

அதுல கொஞ்சம் அர்ஜென்ட் வேலை வந்துடுச்சு. அதனால ஒரு வாரம் கழிச்சி நடிக்கிறேன்னு சொல்லிடுறாங்க. இது அப்பாவுக்கு பயங்கர கோபம். அக்ரீமெண்ட் போட்டு நடிக்க முடியலன்னதும் சரிதாவுக்குப் போன் போட்டுக் கேட்குறார். அவங்களும் என்னை அறிமுகப்படுத்தின டைரக்டர். படத்துக்கு படப்பிடிப்பு முடிய கடைசி நேரத்துல கொஞ்சம் நாள் அதிகமாயிடுச்சு.

அதனால தான் வரமுடியலன்னு சொல்றாங்க. அப்படின்னா அட்வான்ஸை திருப்பிக் கொடுத்துருங்க. இங்க நாங்க எல்லாம் ரெண்டு நாளுக்கு முன்னாடியே மைசூர் சூட்டிங்குக்கு அரேஞ்ச் பண்ணிட்டோம். இந்த நேரத்துல வரமுடியாதுன்னா எப்படி? நான் வேற நடிகையைத் தேடணும்னு கறாரா சொல்லிடறாரு.

அப்புறம் வாங்கின அட்வான்ஸை திருப்பித்தர மாட்டேன். இது என்னோட பாலிசின்னு சொல்லிடுறாரு சரிதா. உடனே அப்பா கொடுத்த அட்வான்ஸ்சுக்கு கரெக்டான தேதியில நடிச்சுக் கொடுக்கலன்னா நான் வாங்காம விட மாட்டேன்.

இது என்னோட பாலிசின்னு சொல்லி போனை வச்சிடுங்கன்னு கட் பண்றாரு. உடனே பிரபல சினிமா இதழில் நேரடியா பேட்டி கொடுக்குறாரு. நடந்த சம்பவத்தைப் பற்றி விலாவாரியா சொல்றாரு.

உடனே சிவகுமாருக்குப் போன் பண்ணி நடிகை லட்சுமியை புக் பண்றாரு. சரிதாவை விட மிஞ்சியவர்தான் அவர். இந்த நேரத்துல அட்ஜெஸ் பண்ணி சூட்டிங்கைத் தள்ளி வைக்கிறது சின்ன விஷயம் கிடையாது. நாளைக்கு மைசூர்ல சூட்டிங்கை வச்சிக்கிட்டு இன்னைக்கு வரலன்னு சொன்னா அதுக்கு ஆணவம்தான் காரணம்.

பிரபல சினிமா இதழில் வந்த பேட்டியைக் கொடுத்ததும் சரிதா அதே பத்திரிகைக்கு உல்டாவா ஒரு பேட்டி கொடுக்குறாங்க. அந்த செக் பவுன்ஸ் ஆச்சு. நான் பணமே கொடுக்காம எப்படி நடிக்க முடியும்னு கேட்கிறார்.

அதுக்கு அப்பா நான் பணம் கொடுத்ததுக்கு ப்ரூப் எல்லாம் அப்பா வச்சிருந்தாரு. அதை வச்சி பத்திரிகையில போட்டாங்க. அப்புறம் நான் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப் போறேன்னு பத்திரிகையில பேட்டி கொடுத்தாங்க. இதைப் பார்த்ததும் சரிதா உடனே வாங்கிய அட்வான்ஸைத் திருப்பிக் கொடுத்துட்டாங்க.

இந்தப் படத்துக்கு டேட்ஸ் கொடுக்க முடியாதுன்னு தெரியும். ஆனா பணத்தை வாங்கிப் போட்டுக்குவாங்க. எப்படியாவது நாம சொல்லிக்கலாம். கேட்டுருவாங்க. எல்லா காசையும் வாங்கிக்கலாம்னு நினைப்பாங்க. நடிகைகளுக்குப் பணத்தாசை தான் காரணம். வாங்கின பணத்தை ஏன் திருப்பிக் கொடுக்கணும்.


முடிஞ்ச அளவு நாமே வச்சிக்கலாம். முடியலன்னா திருப்பிக் கொடுத்துடுவோம்னு நினைப்பாங்க. அதனால ஏற்படுற அசிங்கங்களையும், அவமானங்களையும் பார்க்குறது இல்ல. எந்தத் தொழில்ல கோடிகளையும், லட்சங்களையும் கொட்டிக் கொடுப்பாங்க. இன்னைக்குக் கோடிகள். அன்னைக்கு லட்சங்கள். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

எம்.பாஸ்கர் சிவகுமார், லட்சுமி நடித்த தண்டிக்கப்பட்ட நியாயங்கள் படத்தை 1983ல் இயக்கினார். இந்தப் படத்தின் இசை அமைப்பாளர் சங்கர் கணேஷ். இந்தப் படத்தில் நடிகை மீனா குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.

Tags:    

Similar News