கடும் ஜுரத்திலும் இப்படி ஒரு பாடலா? வாலியின் வரியில் வெளியான எம்ஜிஆர் பட பாடல்
படகோட்டி திரைப்படம்:
பெரும்பாலும் எம்ஜிஆர் படங்களில் பாடல்கள் அனைத்தும் ஹிட் ஆகிவிடும். அவரின் இந்த பாடல் சரியில்லை என்று எந்த பாடலையுமே சொல்ல முடியாது. அப்படி படகோட்டி படத்தில் அமைந்த அத்தனை பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட். படத்தில் அமைந்த மொத்த பாடல்கள் எட்டு. அந்த எட்டு பாடலுக்கும் ஒரே கவிஞர் வாலி. மெல்லிசை மன்னர்கள் இருவருமே இசையமைத்த பாடல்கள் தான் இந்த படத்தின் பாடல்கள்.
இப்படிப்பட்ட படத்தில் ஒரு குறை இருந்ததாகவும் அது எப்படி நிவர்த்தி ஆனது என்பது பற்றியும் ஒரு தகவல் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது. எட்டு பாடல்களில் ஏழு பாடல்கள் கவிஞர் வாலி எழுதி அந்த ஏழு பாடல்களையும் படமாக்கி முடித்து விட்டார்களாம். திடீரென இன்னொரு பாடலையும் சேர்க்கலாம் என்ற சூழ்நிலை வர இந்த படத்தின் இயக்குனர் டி பிரகாஷ் ராவ் இதே பாடலையும் வாலியிடமே கொடுத்து விடலாம் என நினைத்திருக்கிறார்.
நம்பியாருக்கான பாடல்:
ஜி என் வேலுமணி தான் இந்த படத்திற்கு தயாரிப்பாளர். இயக்குனர், தயாரிப்பாளர் ,திரைக்கதை ஆசிரியர் என எல்லாருமே சேர்ந்து இந்த படத்திற்கு இன்னொரு பாடலை வைக்க வேண்டும் என முடிவெடுக்க வாலியை அணுகலாம் என போயிருக்கிறார்கள். அதாவது இந்த படத்தில் வில்லன் நடிகர் நம்பியார். இதில் நம்பியாருக்கு ஒரு ஆசை நாயகி இருக்கிறார்.
அந்த ஆசை நாயகி வில்லன் நடிகர் நம்பியார் முன்னாடி ஆடும் போது நம்பியாருக்கு எம்ஜிஆரின் காதலியாக வரும் சரோஜாதேவி மீது கவனம் திரும்புகிறது. அதனால் இந்த ஆசை நாயகி ஆடி பாடும் போது நம்பியார் மதுபோதையில் ‘ஆடுவது ஆசைநாயகி அல்ல. சரோஜா தேவி தான்’ என நினைக்க வேண்டும். இதுதான் அந்த எட்டாவது பாடல் காட்சிக்கான சூழல். ஏற்கனவே ஏழு பாடல்கள் நடந்த முடிந்து விட்டது.
கடுமையான ஜுரம்:
அதனால் கடைசியாக எட்டாவது பாடல் வேண்டும் என தீர்மானம் செய்கிறார்கள். அதனால் வாலியை பார்க்க செல்ல அங்க வாலிக்கு கடுமையான ஜுரம். இப்படிப்பட்ட சூழலில் இருக்கும் போது உடனடியாக பாடல் வேண்டும் என சொல்லி இருக்கிறார்கள். ஆனால் வாலியோ தன்னுடைய சூழ்நிலையை சொல்லி இந்த நிலைமையில் எப்படி நான் அந்த ரொமான்டிக்கான பாடலை கொடுக்க முடியும் என்று கேட்டிருக்கிறார்.
ஆனால் பட குழு அடம் பிடித்திருக்கிறது. இருந்தாலும் வாலி இந்த ஒரு பாடலை மட்டும் வேறு யாரையாவது வைத்து எழுதிக் கொள்ளுங்கள் என்று கூற இது பட குழுவுக்கு பிடிக்கவில்லை. ஆனாலும் அவர்கள் விடவில்லையாம். ஏனெனில் ஏழு பாடல்களையும் எழுதியவர் நீங்கள். எட்டாவது பாடலை வேறு ஒருவர் எழுதினால் டைட்டிலில் பாடல்கள் என வரும்போது அது உங்கள் பெயருக்குத்தான் கேடு எனக் கூறியிருக்கிறார்கள்.
வேறு வழியே இல்லாமல் கடும் ஜுரத்திலும் வாலி எழுதிய பாடல் தான் ‘அழகு ஒரு ராகம். ஆசை ஒரு தாளம்’ என்ற நம்பியார் மது போதையில் ஆடும் அந்த பாடல். இந்தப் பாடல் உடனே ரிக்கார்டிங் செய்யப்பட்டு உடனே ஷூட்டிங். உடனே அந்த படகோட்டி படத்தில் பிரிண்டில் இணைக்கப்பட வேண்டும். இது விறுவிறுப்பாக நடக்க படமும் ரிலீஸ் ஆனது. கடைசியில் படத்தின் வெற்றி மாபெரும் வெற்றியாக மாறியது. இன்றுவரை படகோட்டி என்றால் அதன் பாடல்களுக்கு என ஒரு தனி வரவேற்பே இருக்கிறது.