ஒரு கைதியின் டைரி படம் உருவானது எப்படி? அட... இவ்ளோ விஷயம் நடந்துருக்கா?
பாரதிராஜா இயக்கத்தில் கமல் இரட்டை வேடத்தில் நடித்த சூப்பர்ஹிட் படம் ஒரு கைதியின் டைரி. இந்தப் படத்திற்கு கதை, வசனம் எழுதியவர் பாக்கியராஜ். இந்தப் படத்தில் பிரபல பின்னணிப்பாடகர் மலேசியாவாசுதேவன் வில்லனாக நடித்து அசத்தி இருப்பார். ரேவதி கதாநாயகியாக நடித்துள்ளார். ஜனகராஜின் நகைச்சுவை படத்தில் தூக்கலாக இருக்கும்.
பொன்மானே கோபம்: இந்தப் படம் பட்டி தொட்டி எங்கும் சூப்பர்ஹிட்டானது. இளையராஜாவின் இசையில் பாடல்கள் எல்லாமே சூப்பர்ஹிட்டாக இருந்தது. ஏபிசி நீவாசி, பொன்மானே கோபம் ஏனோ ஆகிய சூப்பர்ஹிட் பாடல்கள் இந்தப் படத்தில் தான் உள்ளது. இந்தப் படம் எப்படி உருவானதுன்னு நடிகரும் இயக்குனருமான கே.பாக்கியராஜ் சில தகவல்களை பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணனுடன் பகிர்ந்துள்ளார்.
ஒரு கைதியின் டைரி: அதாவது ஒரு கைதியின் டைரி வரும்போது பாக்கியராஜ் கொஞ்சம் வளர்ந்து வந்த இயக்குனர் ஆகி விட்டார். ஒரு கேப்புக்குப் பிறகு குருவான பாரதிராஜாவுடன் இணைந்து பணிபுரிகிறார். அந்த அனுபவம் எப்படி இருந்ததுன்னு பாக்கியராஜ் சொல்கிறார். வாங்க பார்க்கலாம்.
சிவப்பு ரோஜாக்கள்: நான் எப்பவுமே அவருக்கு அசிஸ்டண்ட் தான். மறுபடியும் அசிஸ்டண்டா அவருக்கிட்ட வேலை பார்க்கிறேன் என்கிற ஃபீலிங்தான். வேற ஒண்ணும் கிடையாது. ஆனா என்னன்னா ஜனங்க எதிர்பார்ப்பு வேற மாதிரி இருந்தது. முதல்ல சிவப்பு ரோஜாக்கள் நேரத்துல இருந்தது வேற. ஆனா கைதியின் டைரி நேரத்துல நானும் தனியா வளர்ந்துட்டேன் இல்லையா.
இன்னொருத்தருக்கு கதை: அதனால இப்ப வந்து எங்க டைரக்டர் டைரக்ட் பண்றாரு கமல் ஆக்ட் பண்றாரு நான் பாக்கியராஜ். முந்தானை முடிச்சு ரிலீஸ்சுக்குப் பிறகு இன்னொரு டைரக்டரோட வந்து இன்னொருத்தருக்கு கதை எழுதுறாருன்னா ஒரு எதிர்பார்ப்பு வருது இல்லையா.
கதையையே புடிச்சேன்: அதனால இந்த காம்போவுக்குத் தகுந்த மாதிரி கொஞ்சம் வித்தியாசமாக கதை எழுதி பண்ணுவோம். வழக்கமா இல்லாம கொஞ்சம் வேற ஸ்டைல்ல எழுதுவோம்னு நினைச்சி யோசிச்சித்தான் அந்த கைதியின் டைரி படத்தோட கதையையே புடிச்சேன் என்கிறார்.