ஜெயலலிதா விஷயத்தில் எம்ஜிஆர் இப்படித்தான் செய்வார்.. பாடல் மூலம் அப்பவே சொன்ன வாலி
எம்ஜிஆர் வாலி ஆரூர் தாஸ். எம்ஜிஆருக்கும் வாலிக்கும் எவ்வளவு நெருக்கம் என்பது அனைவருக்குமே தெரியும். எம்ஜிஆருக்கும் ஆரூர்தாசுக்கும் இடையே எவ்வளவு நெருக்கம் என்பதும் அனைவருக்கும் தெரியும் .எம்ஜிஆர் உடன் நெருக்கம் கொள்ளாதவர்கள் தான் யார் .எம்ஜிஆர் உடன் நெருங்கி பழகாதவர்கள் நெருங்கி பேசாதவர்கள் நெருங்கி பார்க்காதவர்கள் கூட எம்ஜிஆரை ஒரு முறை நேரில் சந்திக்க இயலாதவர்கள் கூட எம்ஜிஆர் உடன் நேரில் இருந்து எம்ஜிஆரை ஆரத்தழுவி பழகியவர்களாகவே நினைத்துக் கொள்வார்கள்.
எம்ஜிஆருக்கு அப்படிப்பட்ட ஒரு சக்தி உண்டு. எம்ஜிஆர் பிக்சர்ஸ் எம்ஜிஆர் சொந்த தயாரிப்பில் அடிமைப்பெண் திரைப்படம் .இந்த படத்தை முதலில் எம்ஜிஆர் இயக்குவதாக இருந்தது. அதன் பிறகு எம்ஜிஆர் அந்தப் படத்தை தூக்கி போட்டுவிட்டு நாம் இந்த படத்தை இயக்க வேண்டாம். கே சங்கர் இயக்கட்டும் என கே ஷங்கரை வைத்து இந்த படத்தை எடுத்தார் எம்ஜிஆர். இந்த படத்திற்கு கே வி மகாதேவன் இசையமைக்கிறார். இந்த படத்தில் எம்ஜிஆர் கதாநாயகனாக ஜெயலலிதா கதாநாயகியாக இரட்டை வேடம் இவர்களுடன் இணைந்து பண்டரிபாய் ,நடிகர் சோ, சந்திரபாபு ,ஆர் எஸ் மனோகர் என ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்தனர்.
படம் பெரிய அளவில் ஹிட். அதோடு படத்தில் அமைந்த பாடல்களும் சூப்பர் ஹிட். குறிப்பாக தாயில்லாமல் நானில்லை ,ஏமாறாதே ஏமாற்றாதே, உன்னை பார்த்து இந்த உலகம் சிரிக்கிறது ,எஸ்பிபி எம்ஜிஆருக்கு முதன்முதலாக பாடிய ஆயிரம் நிலவே வா ,காலத்தை வென்றவன் நீ காவியம் ஆனவன் நீ என இத்தனை பாடல்கள் இருந்தது .அதில் இன்னொரு பாடலாகிய அம்மா என்றால் அன்பு அப்பா என்றால் அறிவு .இந்தப் பாடலை பொருத்தவரைக்கும் எம்.ஜி.ஆர் ஜெயலலிதா மடியில் ஆள் வளர்ந்தாலும் அறிவு வளராத ஒரு குழந்தையாக மாறி படுக்க அவரை ஒரு தாய் போல ஜெயலலிதா இந்த பாடலை பாடுவதாக படமாக்கி இருப்பார்கள்.
முதலில் இந்தப் பாடல் டி எம் எஸ் பாடி ஒளிப்பதிவும் செய்து விட்டார்கள் .அவருடைய பாணியில் அந்தப் பாடலும் கேட்பதற்கு நன்றாகத் தான் இருந்திருக்கிறது .அதன்பிறகு வாலியிடம் எம்ஜிஆர் இந்த பாடலை ஜெயலலிதாவை வைத்து பாட வைத்திருக்கிறேன். எப்படி இருக்கிறது என கேட்டிருக்கிறார். உடனே வாலி இதுதான் எனக்கு பல வருடங்களுக்கு முன்பே தெரியுமே என கூறினாராம் .உடனே எம்.ஜி.ஆர் இந்த முடிவை இப்பொழுது தானே நாங்கள் எடுத்து இருக்கிறோம். அது எப்படி உங்களுக்கு பல வருடங்களுக்கு முன்பே தெரியும் என கேட்டாராம் .
அதற்கு வாலி அட இன்னும் எத்தனை ஆண்டுகள் கழித்து நீங்கள் என்னென்ன செய்வீங்க என்பதை நான் முன்பே பல பாடல்களில் தெரிந்தோ தெரியாமலோ தீர்க்கதரிசி போல சொல்லி இருக்கிறேன் அல்லவா என கூறினாராம். உடனே எம்ஜிஆர் என்ன சொல்றீங்க வாலி தெளிவா சொல்லுங்க என கேட்க அதற்கு வாலி அரச கட்டளை என்ற படத்தில் ஒரு பாடல் வரும். இதே கேவி மகாதேவன் தான் இசையமைப்பு. ஜெயலலிதா ஆடி பாட சுசீலா குரல் கொடுத்த பாடல். அந்தப் பாடலை நான் தான் எழுதி இருந்தேன். என்னை பாட வைத்தவன் ஒருவன் என் பாட்டுக்கு அவன் தான் தலைவன் என்ற பாடல்.
சுசீலா குரல் கொடுத்தாலும் என்னை பாட வைத்தவன் ஒருவன் என ஜெயலலிதா பாடுவது போல அந்த காட்சியை படமாக்கி இருப்பார்கள். அந்தப் பாட்டின் பாடு பொருளாக கதாநாயகனாக உங்களை நினைத்து தான் பாடுகிறார். பிற்காலத்தில் இத்தனை ஆண்டுகள் கழித்து ஜெயலலிதாவை உங்க படத்தில் அதுவும் அடிமைப்பெண் படத்தில் பாட வைக்கிறீர்கள். இதைத்தான் நான் அத்தனை ஆண்டுகளுக்கு முன்பே என்னை பாட வைத்தவன் ஒருவன் என்று நான் சொல்லி விட்டேன் என விளக்கம் கொடுத்தாராம் வாலி. இதைக் கேட்டதும் எம்ஜிஆர் ஆச்சரியத்தில் திகைத்துப் போய் நின்றாராம் .இந்த சுவாரசிய தகவலை பத்திரிக்கையாளர் ஆதவன் ஒரு பேட்டியில் கூறினார்.